Manju Warrier Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சு வாரியர்.. என்னது இப்படி ஒரு ரோலா? குஷியான ரசிகர்கள்..

அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்த துணிவு படம் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளிய நிலையில், தற்போது இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விடுதலை முதல் பாகம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும் தேசிய விருது வென்றவருமான இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படத்தைத் தொடர்ந்து ‘விடுதலை’ முதல் பாகத்தை இயக்கினார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீசானது. விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்த நிலையில், பெருமாள் வாத்தியார் எனும் போராளி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் இப்படம் பெரும் விவாதப் பொருளாக மாறியதுடன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. மேலும், நடிகர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி  பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம் மேனன், ராஜீவ்மேனன், பாலாஜி சக்திவேன், இயக்குநர்  தமிழ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சூரியின் பதிவு

இளையராஜா இப்படத்துக்கு  இசையமைத்திருந்த நிலையில் காட்டு மல்லி, உன்னோட நடந்தா ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தன. ஜீ5 ஓடிடி தளத்தில் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளுடன்  இப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான நிலையில், அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு படக்குழு முழுவீச்சில் தயாராகி வருகிறது. நடிகர் சூரி முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் தான் ‘விடுதலை’ பட குமரேசன் கெட் அப்பில் ஷூட்டிங்குக்கு கிளம்பி செல்லும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

முதல் பாகம் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்த நிலையில் , இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியாரின் கதாபாத்திரம், அவரது நியாயங்கள், அவரது ஃப்ளாஷ்பேக் ஆகியவற்றை சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடி

இந்நிலையில் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரிய நடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே மஞ்சு வாரியர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறனின் முந்தைய படமான அசுரன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இந்த கதாபாத்திரத்துக்காக மஞ்சு வாரியரை படக்குழு அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக நடிகர் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்த துணிவு படம் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளிய நிலையில், தற்போது இந்தப் படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மேலும் படிக்க: Mahendran: திரைமொழியின் உச்சம்.... இயக்குநர் மகேந்திரன் வருகையும்.. தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கமும்!

Continues below advertisement