மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக் திருமணம் 






சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்ற மஞ்சிமா மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் தங்களின் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி நடக்கவுள்ளது என்று தெரிவித்தனர். தற்போது, இந்த கோலிவுட் க்யூட் ஜோடிகளுக்கு  குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் வெந்நிற ஆடையில் பார்க்க அழகாக உள்ளனர். இவர்கள் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


மாமன்னன் க்ளிம்ப்ஸ்






நேற்று, உதயநிதி தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அஜித் -ஷாலினியின் பாரிஸ் க்ளிக் 




தமிழ் சினிமாவின் கனவு தம்பதியாக பார்க்கப்படுபவர்கள் அஜித்- ஷாலினி. மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும் இந்த தம்பதியின் புகைப்படங்கள் முன்னெல்லாம் எப்போதாவது சமூகவலைதளங்களில் தலை காட்டும். ஆனால் இப்போதெல்லாம் இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி உலா வருகின்றன. அண்மையில் கூட, தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.


அந்த வகையில் நேற்று, அஜித், ஷாலினி ப்ரான்சில் ஒன்றாக இருக்கும் மற்றொரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. 


ஓடிடியில் வெளியாகும் லவ் டுடே 






பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. வெளியான அன்றைய தினம் முதல் தற்போது வரை பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டு வரும் இந்தப்படம், அண்மையில் 50 கோடியை தாண்டியதாக தகவல் வெளியானது. 


இதனிடையே, இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில்  ‘லவ் டுடே’ திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


தோழிகளுடன் பார்ட்டி செய்த ஹன்சிகா 






ஹன்சிகா, கல்யாணத்திற்கு முன்னதாக தனது தோழிகளுக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். கிரீஸ் நாட்டு தெருக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் ஜாலியாக தொழிகளுடன் பார்ட்டியை கொண்டாடிய ஹன்சிகா, அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது.