கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன் " நாவலை மய்யமாக வைத்து புராண கதையை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே . பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகிவரும் இந்த படத்தில்  விக்ரம், ஜெயம்  ரவி, கார்த்தி, சரத்குமார்,  ஐஸ்வர்யா, திரிஷா மற்றும் பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள் . கடந்த ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது . கொரோனா காரணமாக படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது .




இந்நிலையில் , 9 மாதங்கள் கழித்து படம் மிகவும் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. ஒரு மதம் இடைவெளிவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழு முடிவுசெய்தது. ஆனால், மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




முக்கிய கதாநாயகனாக பொன்னியன்செல்வன் கதாபாத்திரத்தில்  ஜெயம்ரவி. பொன்னின்செல்வன் பிரகாஷ்ராஜ் சுந்தர சோழனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர சோழனின் மூத்த மகனாக ஆதித்யா கரிகலனாக விக்ரமும், கிரீடம் இளவரசன் மற்றும் வடக்கு ட்ரூப்ஸின் தளபதியாகவும், த்ரிஷா சோழ இளவரசி குந்தவை கதாபத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .




மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது மிகுந்த பொருட்செலவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்குகின்றனர். தனது இசையமைப்பில், ரவி வர்மா ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக வந்துள்ளது என்று ரஹ்மான் தெரிவித்திருந்தார் . 2022-ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.