சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை. தொகுப்பாளர் அஞ்சனாவின் சகோதரியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார். அவருக்கென ரசிகர்களும்  உருவாக தொடங்கியிருக்கிறார்கள்.


இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். காதல் திருமணம் செய்த மணிமேகலை தன் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். இவர்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்களை அதிகம் பேர் பகிர்ந்தும் வருகின்றனர்.


 






இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மணிமேகலையும் அவரது கணவரும் எடுத்துக்கொண்ட வீடியோவை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், புத்தம் புது காலை விடியாதோ பாடல் பின்னணியில் ஒலிக்க இருவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.


 






வீடியோ மட்டுமின்றி பொங்கல் பண்டிகையை இருவரும் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களையும் தனது பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.


 






தற்போது அந்த வீடியோவையும், புகைப்படங்களையும் ரசிகர்கள் பலர் பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண