Just In





Kudumbasthan Review : ஹாட்ரிக் அடித்தாரா மணிகண்டன்..?குடும்பஸ்தன் பட சோசியல் மீடியா விமர்சனம்
குட் நைட் , லவ்வர் என அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களைக் கொடுத்த மணிகண்டன் தற்போது குடும்பஸ்தன் படத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தாரா என்பதை பார்க்கலாம்

குடும்பஸ்தன்
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் குடும்பஸ்தன். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார். குட் நைட் , லவ்வர் என அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களைக் கொடுத்த மணிகண்டன் தற்போது குடும்பஸ்தன் படத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தாரா என்பதை பார்க்கலாம்
குடும்பஸ்தன் விமர்சனம்
"இந்த ஆண்டின் முதல் தரமான படம் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம். இயக்குநர் ராஜேஷ் மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் இணைந்து இயல்பாக நகைச்சுவையாக தூண்டக்கூடிய வசனங்களை எழுதியுள்ளார்கள். அதே நேரம் க்ளைமேக்ஸில் நம்மை உணர்ச்சிவசப் படவைக்கிறார்கள். இன்றைய. தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் இயல்பான நடிப்பை மணிகண்டன் வெளிப்படுத்துகிறார் ' என விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.