குடும்பஸ்த்தன்
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் குடும்பஸ்தன். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் மூன்றாவது வாரத்திலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது
குடும்பஸ்த்தன் பட வசூல்
குடும்பஸ்த்தன் திரைப்படம் இதுவரை 21 கோடி வசூலித்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் படம் 25 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மணிகண்டன் நடித்து முன்னதாக வெளியான குட் நைட் , லவ்வர் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்த வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது குடும்பஸ்த்தன் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மணிகண்டன். மேலும் வளர்ந்து வரும் நடிகர்களில் தொடர்ந்து கமர்சியல் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் மணிகண்டன்.
குடும்பஸ்த்தன் ஓடிடி ரிலீஸ்
குடும்பஸ்த்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ 5 தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.