நாளை (செப்டம்பர் 10) தமிழில் இரு முக்கியமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. ஒன்று சூரியின் மண்டாடி மற்றொன்று கார்த்தி நடித்துள்ள சர்தார் 2. இரண்டு படங்களுக்கான, முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் கடல், மீனவ வாழ்க்கை மற்றும் படகு பந்தயத்தை மையமாகக் கொண்ட ‘மண்டாடி’; மறுபுறம் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள ‘சர்தார் 2’. இரு படங்களும் வெவ்வேறு ஜானர்களில் உருவாகியிருந்தாலும், இரு படங்களிடையில் டிக்கெட் புக்கிங்கில் கடுமையான போட்டி நிலவி வருகிறது 

Continues below advertisement

தமிழ்நாட்டில் சூரியின் மண்டாடி முன்னிலை

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். கடல் மற்றும் மீனவ சமூகத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம், படகு பந்தயத்தை முக்கியக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. சூரியுடன் மகிமா நம்பியார், சத்யராஜ், சுகாஸ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தற்போதைய நிலைப்படி மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் முன்பதிவில் ரூ 1.40 வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முன்பதிவில் ரூ 1.08 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தற்போதைய நிலைப்படி முன்பதிவில் சர்தார் 2 படத்தைக் காட்டிலும் சூரியின் மண்டாடி திரைப்படமே முன்னிலை வகித்து வருகிறது 

தெலுங்கில் கார்த்தி ஆதிக்கம் 

கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சர்தார் 2’ படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். 2022ல் வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி மீண்டும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Continues below advertisement

கார்த்திக்கு தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு மாநிலங்களிலும் கணிசமான ரசிகர் பட்டாளம் இருப்பதால், ‘சர்தார் 2’ படத்தின் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  தெலுங்கில் சர்தார் 2 திரைப்படம் முன்பதிவில் ரூ 62 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகவும் அதே நேரம் மண்டாடி திரைப்படம் ரூ 23 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . 

ஒருபக்கம் நகைச்சுவை நாயகனாக தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரத்தின் படத்திற்கே சவால்விடும் அளவிற்கு சூரி வளர்ந்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சர்தார் முதல் பாகத்தைப் போல் இரண்டாவது பாகம் ரசிகர்களை திருப்தி செய்துவிட்டால் நிச்சயம் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். நாளை இரு படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் எந்த படம் முன்னிலைக்கு செல்லும் என்பதை சொல்லமுடியும் .