நடிகர் அஜித் மறைந்த மலையாள இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க விருப்பப்பட்ட நிலையில் அது நிறைவேறாமலே போய் விட்டது. 


மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிஜூ மேனன், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.சச்சிதானந்தம் எழுதி இயக்கிய இப்படம் அந்த ஆண்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னால் மலையாளத்தில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் ஆனது. தமிழிலும் இப்படத்தை ரீமேக் செய்ய சொல்லி ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். 






சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு சிறந்த இயக்குநர், துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது. ஆனால் 47 வயதான சச்சிதானந்தம் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் உலுக்கி எடுத்தது. 


இந்நிலையில் சச்சிதானந்தம் மனைவி சிஜி சச்சி வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் அதை வாங்க சச்சி இல்லாதது மிகுந்த வருத்தமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் 2016 ஆம் ஆண்டு சபரிமலைக்குப் போய்விட்டு திரும்பி வரும்  போது ஹோட்டலில் தங்கிய அவருக்கு இடுப்புக்குக் கீழே தளர்ந்துபோனது. மருத்துவ பரிசோதனையில் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பலமுறை இடுப்புக்குக் கீழ் தளர்ந்துபோவதும் சிகிச்சைக்குப் பின் சரியாவதுமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு பலமுறை இடுப்புக்குக் கீழ் தளர்ந்துபோவதும் என்ற நிலையில் அய்யப்பனும் கோஷியும் அய்யப்பனும் முடித்து ஆபரேஷன் செய்யலாம்  என நினைத்தார். கடுமையான வலிக்கு நடுவில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஷூட்டிங் நடத்தினார். 


ஒருமுறை அய்யப்பனும் கோஷியும் பார்த்துவிட்டு சச்சியிடம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் பேசினார். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் உங்களுடன் ஒரு படம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதுபற்றி பேச நான் கொச்சி வரட்டுமா என கேட்டார். அதற்கு சச்சியோ இப்போது வேண்டாம். ஒரு ஆபரேஷனுக்காகப் போகிறேன். ஆபரேஷன் முடிந்த பிறகு நான் சென்னையில் வந்து பார்க்கிறேன் என அஜித்திடம் சொன்னார். ஆனால் அந்தச் சந்திப்பு நடக்காமலே போனது என சிஜி சச்சி கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண