நரேந்திர மோடியாக உன்னி முகுந்தன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ' மா வந்தே' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிராந்தி குமார் இயக்க இருக்கிறார். மலையாளத்தில் கடந்த ஆண்டு மார்கோ என்கிற ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி நடித்து பான் இந்தியளவில் வெற்றிக் கண்டவர் உன்னி முகுந்தன் என்பது குறிப்பிடத் தக்கது.
2011 ஆம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த சீடன் படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தவர் உன்னி முகுந்தன். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று மலையாள சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார் . தமிழில் சூரி , சசிகுமார் நடித்த கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் யசோதா படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார்.