சமூக ஆர்வலர் மற்றும் நோபல் பரிசு வெற்றியாளருமான மலாலா யூசஃப் சாய் முதன் முறையாக திரையுலகில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸின் ரசிகையான மலாலா, ஆப்பிள் ஃபிலிம்ஸுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பில் களமிரங்கவுள்ளார். எக்ஸ்ட்ராகரிகுலர் எனப்படும் இவரின் தயாரிப்பு நிறுவனம், இண்டி ஸ்டுடியோ A24 எனும் தயாரிப்பு நிறுவனத்துடன் இணையபோகிறது. இவர்கள், பெயர் வைக்கப்படாத ஆவணப்படத்தை தயரிக்கவுள்ளனர். இந்த படத்தின் கதை, தென் கொரியாவின் தீவில் வாழும் ஹன்யியோ எனும் மீனவர் பெண்களின் சமூகத்தை பற்றிய கதையாகும்.
இவர்களின் தயாரிப்பில் உருவாக போகும் இப்படத்தை பிபாடி வழங்கும் விருதினை பெறவிருந்த சூ கிம் எனும் டைரக்டர் இயக்கவுள்ளார். இதைப்பற்றிய பேச்சு வார்த்தைகள் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது என்றும் பேசப்பட்டது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்களை, கடந்த திங்கட் கிழமையன்று மலாலா வெளியிட்டார்.
எக்ஸ்ட்ராகரிகுலர் தயாரிப்பு நிறுவனமானது, ஃபிப்டி வொர்ட்ஸ் ஃபார் ரெயின் எனும் நாவலை தழுவிய படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதில், இரண்டாம் உலக போருக்கு பின், ஜப்பான் நாட்டில் தன்னை ஏற்றுக்கொள்ளவதற்காக ஒரு பெண் படும் பாட்டினை விளக்குகிறது.
இதைக்குறித்து பேசிய மலாலா, “ பெண்களின் உரிமை குறலையும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் , முஸ்லீம் இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்களின் திறமையையும் வெளிகொண்டு வரும் முயற்ச்சியில் நான் ஈடுபட்டுவருகிறேன். வித்தியாசமான கதைகளையும், சமூகத்தில் நாம் வைத்திருக்கும் பிற்போக்கான சிந்தனைகளை உடைக்கும் கதைகளையும் நான் தயாரிக்க விரும்புகிறேன். இப்படம், பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். இப்படத்தில் உள்ள கதாப்பாத்திரங்களை மக்கள் விரும்புவார்கள் என்று நம்பிகிறேன் ”என்று கூறியுள்ளார்.