டோலிவுட் சினிமாவின் மிகவும் வசீகரமான நடிகராக விளங்குபவர் மகேஷ் பாபு. தனது 47 வயதிலும் அழகாகவும் ஃபிட்டாகவும் தனது தோற்றத்தை பராமரித்து வருகிறார். இந்நிலையில், தனது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்த ஸ்பெஷல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஒன்றை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
டோலிவுட் ப்ரின்ஸ்
தென்னிந்திய சினிமாவில் அதிக அளவிலான டைட்டில் வைத்து அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. அவரை டோலிவுட்டின் பிரின்ஸ், கிரீக் காட் ஆஃப் டோலிவுட், சூப்பர் பிட் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பிட்டான பாடி, ஸ்மார்ட் ஹீரோ என்பதை கடந்தும் தனது திரை பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார்.
தற்போது பிரபல இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'குண்டூர் காரம்' படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் ஆரோக்கியமான காலை உணவு பற்றி மகேஷ் பாபு பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது.
காலை உணவு
மகேஷ் பாபுவின் ஆரோக்கியமான பிரேக்பாஸ்ட் ரெசிபியில் ஊறவைத்த நட்ஸ், ஓட்ஸ் மற்றும் விதைகளின் கலவை இடம்பெற்றுள்ளன. அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு தன்னுடைய பணிகளை திறம்பட செய்ய தேவையான சக்தியை இந்த உணவ்
கொடுக்கும் என மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். சன் கிளாஸ் உடன் தன் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைலில் கூல் லுக்கில் தனது பிரேக்ஃபாஸ்ட்டை ருசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
குண்டூர் காரம்
குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே முதலில் கமிட்டானர். அவர் நடித்த காட்சிகள் 10 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக இப்படத்தில் இணைந்துள்ளார் மீனாட்சி சவுத்ரி. ஸ்ரீலீலா லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் தான் முடிவடைந்தது.
பிரபலமான மகேஷ் பாபுவின் மகள்
விரைவில் மகேஷ் பாபு தனது குடும்பத்துடன் பாரிஸ் அல்லது துபாய்க்கு சென்று தனது மகள் சித்தாராவின் பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தனது மகளின் முதல் விளம்பரம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதால் ஒரு தந்தையாக பெருமையாக உணர்வதாக மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
தனது மகளின் விளம்பரத்தை பல முறை பிளே செய்து ரசித்தாராம் மகேஷ் பாபு. சித்தாரா நகை விளம்பரம் ஒன்றில் சமீபத்தில் நடித்திருந்தார். டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற அந்த விளம்பரத்திற்கு 1 கோடி ருபாய் சம்பளம் பெற்றாராம். ஒரு ஸ்டார் நடிகரின் குழந்தை என்றாலும் 11 வயதிலேயே கோடியில் சம்பளம் பெற்றது திரையுலகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தனது முதல் சம்பளத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சித்தாரா.