சரிகமா ஒரிஜினல் நிறுவனம் சார்பில் 96 பிரபலமான கெளரி கிஷன் மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா நடிக்கும் மகிழினி என்ற ஆல்பம் தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கோவிந்த் வசந்தா இசையில் மதன் கார்க்கி எழுதியிருக்கும் அந்த ஆல்பம் சற்று முன் வெளியாகியிருக்கிறது.
லெஸ்பியன் எனப்படும் தன்பாலீர்ப்பாளர்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஆதரிக்கும் விதமாகவும் இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது. வி ஜி பாலசுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ள இந்த பாடல் ஆல்பத்தை ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கெளஸ்துபா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22ம் தேதி பாடல் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன் ஆல்பம் வெளியாகியுள்ளது. முன்னணி பிரபல கதாநாயகிகள் துணிந்து நடித்துள்ள இந்த ஆல்பத்தின் இசை வெகுவாக பாராட்டப்படும் அதே வேளையில், இரு பெண்களும் காதலிக்கும் இந்த உறவை தமிழ் சமூகம் எப்படி அனுகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நடன கலைஞர்களான இரு பெண்களும், தன்பால் ஈர்க்கப்பட்டு, காதல் மலர்வதும், அவர்களது குடும்பத்தார் எதிர்ப்பதும், பின்னர் அவர்களை சமரசப்படுத்துவமாய் ஒரே பாடலில் ஒட்டுமொத்த லெஸ்பியன் உறவினை எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரமின் கோப்ரா படத்தின் இணை இயக்குனரான பாலசுப்பிரமணியன் தான் இந்த ஆல்பத்தின் இயக்குனர்.
சென்னையை சேர்ந்த மலர்(கெளரி)-டில்லியில் இருந்து வரும் இந்துஜா(அனகா) இருவரும் பரத நாட்டியம் மீதுள்ள ஈர்ப்பால் கற்க வருகின்றனர். அவர்களது பயிற்சியின் போது காதல் பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே மகிழினி ஆல்பத்தின் கதை. விஸ்வகிரணின் நடனம், ஆல்பத்தை வேறு லெவலுக்குச் கொண்டு சென்றதோடு, சொல்ல வந்த கருத்தையும் ஆழமாக புரிய வைத்திருக்கிறது. அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுதான்... இதில் ஹைலைட்! பற்றி எரியும் இரு பெண்களின் காதலை, அனலோடும்... அன்போடும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் மகிழினி ஆல்பத்தின் வரிகளும் வெகுவாக பாராட்டை பெற்றுள்ளன. இதற்காக மதன் கார்கிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மகிழினி ஆல்பம் வீடியோ இதோ....
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்