ஸ்டாண்ட் அப் காமெடியை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்து ரசிக்க வைத்தவர்களில் மதுரை முத்துவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி 2007ல் சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது மதுரை முத்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அதற்குப் பின்னர் அவருக்கு அத்தனையும் ஏறுமுகம் தான். கல்யாண வீடு தொடங்கி கனடா தமிழ்ச் சங்கம் வரை மதுரை முத்துவை புக் செய்து லவட்டிக் கொண்டு சென்று வயிறு முட்ட சிரித்து அனுப்பியது. அந்த சிரிப்பு பலருக்கும் அருமருந்தானது.

Continues below advertisement


சேனல்கள் என்றால் போட்டியில்லாமல் இருக்குமா? அப்படித்தான் ரியாலிட்டி ஷோக்களின் கிங்கான விஜய் டிவி மதுரை முத்து மீது தன் பார்வையை வீசியது. 


இதனால், விஜய் டிவியின் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அவரும் முதல் ஆளாக எலிமினேட் ஆனாலும் அதற்கு பிறகு அவர் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு மொக்க காமெடி கூறிஅனைவரையும் அலறவிட்டார்.
குக் வித் கோமாளி மட்டுமல்ல கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளிலும் மதுரை முத்து கலந்து கொண்டிருக்கிறார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லோகா என்ற வையம்மாள் (32) கார் விபத்தில் பலியானார். மனைவி பலியான போது மதுரை முத்து அமெரிக்கா சென்றிருந்தார். மனைவியின் மரணச் செய்தி கேட்டு அவர் அங்கிருந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சில ஆண்டுகளில் மதுரை முத்து மறுமணம் செய்து கொண்டார். அவர் தனது இரண்டு குழந்தைகளையும் கவனிப்பதற்காகவே மறுமணம் செய்து கொண்டதாகக் கூறினார். மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்தியை அவர் மறுமணம் செய்து கொண்டார். இதெல்லாம் பழங்கதை. இப்போது லேட்டஸ்ட் கதை எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மதுரை முத்து பேசியதைக் கேட்டு முதன் முறையாக பலரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.


காரணம் இதுதான். விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு வெரைட்டியா கலர்ஃபுல்லா ரியாலிட்டி ஷோக்களை கொடுப்பதில் கிங் தான் விஜய் டிவி. 


அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள நிகழ்ச்சி சூப்பர் டேடி. இதில் பிரபலங்களும் அவர்களின் பிள்ளைகளும் இடம்பெற்றுள்ளனர். அதில் மதுரை முத்துவும் அவர் மகளும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி புரோமா வெளியானது. வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் நடைபெறவுள்ளது. இந்த புரோமோவில் பெண் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்று பேசினார். தன் மகள் பாத்ரூம் சென்றுவிட்டு ஜிப் போட உதவி கேட்க பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைத்து அதை செய்யச் சொன்னேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார். அவரது கண்ணீர் அனைவரையும் கலங்கவைத்துள்ளது.