மேலும் அறிய
Madurai ; மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணியில் உருவாகும் புதிய படம் !
ஜல்லிக்கட்டு சம்பந்தமாக தான் படம் வந்துள்ளது. ஆனால் இப்போதுதான் வடமாடு மஞ்சுவிரட்டுக்கும் படம் எடுக்கிறார்கள். - ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் நெகிழ்ச்சி.

வடம் திரைப்படம்
Source : whatsapp
மதுரை பாண்டி கோவிலில் தரிசனம் செய்த வடம் திரைப்பட குழுவினர்: மதுரையை மையமாக வைத்து எடுக்கக்கூடிய படங்கள் வெற்றி பெறும் இயக்குநர் பேட்டி.
வடம் திரைப்படம் - பாண்டிக் கோயிலில் தரிசனம்
விமல், நடராஜன், நரேன் நடிப்பில், கேந்திரன் முனியாசாமி இயக்கத்தில் உருவாகிய புதிய தமிழ் திரைப்படம் "வடம்". வடமாடு மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) பின்னணியில், மதுரை மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மண் சார்ந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. டி.இமான் இசையில் உருவாகிய இப்படத்தின் முதல் தோற்றம் (First Look) வெளியாக உள்ள நிலையில் இன்று மதுரை பாண்டிக்கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.
ஜல்லிக்கட்டிற்கு போல் - வட மஞ்சுவிரட்டிற்கும் மரியாதை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கேந்திரன்...,” விமல், நடராஜன், நரேன்உள்ளிட்டோர் நடித்துள்ள வடம் தகரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளது. இதற்காக பாண்டி கோவிலில் வந்து சாமி கும்பிட்டோம். இந்தப் படத்துல இமான் இசையமைத்துள்ளார். வடம் என்றாலே வடமாடு மஞ்சுவிரட்டு தான். மாடு என்றாலே ஜல்லிக்கட்டு தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் வட மஞ்சுவிரட்டு என்பது தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலுமே தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. காலம் எவ்வளவு மாறினாலும் நமது பாரம்பரியம் வீரம் என்றும் மாறாது. அதே போன்று பாரம்பரியத்துடன் வந்த படங்களும் தோற்றதில்லை. இந்தப் படத்துல மாட்டுக்கும் நமக்குமானா உறவை சொல்லுகிற படமாக அமைய உள்ளது. இதில் காதல் வீரம் நட்பு துரோகம் கலந்த ஒரு கலவையாக குடும்பத்தோடு பார்க்கப்பட கூடிய ஒரு படமாக அமையும். முக்கியமாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் படமாக்கப்பட உள்ளது மார்ச் மாதம் இப்படம் வெளிவர இருக்கிறது எனத் தெரிவித்தார். அதோடு இந்த படத்துல நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர் பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். ஆறு பாட்டுகளுடன் ஒரு இசை விருந்தும் இந்த படத்தில் இருக்கும். இதுவரை கதாநாயகனுக்கு தான் ஓபனிங் சாங்ஸ் இருக்கும் ஆனால் இந்த படத்தில் பாண்டி முனீஸ்வரர் மாட்டுக்கு ஓப்பனிங் சாங் உள்ளது என்றார்.
மாட்டுக்கும் மனிதனுக்குமான உறவு
தயாரிப்பாளர் மாசாணி பிக்சர் ஆர்.ராஜசேகர் கூறும் போது...,” இந்த வடம் திரைப்படத்தின் கதையை சொன்னதும் எங்களுக்கு பிடித்து விட்டது உடனடியாக படத்தை எடுக்க தயாரானோம். இந்தப் படத்துல மாட்டுக்கும் நமக்கும் ஆனா உறவை அழகாக சொல்லி உள்ளார்கள் என்றார்.
வடமாடு மஞ்சுவிரட்டுக்கும் படம் எடுக்கிறார்கள்
ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் செய்தியாளர்களை சந்தித்த போது...,” இதுவரை ஜல்லிக்கட்டு சம்பந்தமாக தான் படம் வந்துள்ளது. ஆனால் இப்போதுதான் வடமாடு மஞ்சுவிரட்டுக்கும் படம் எடுக்கிறார்கள் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























