பென்ஸ் படத்தில் இணைந்த மடோனா செபாஸ்டியன் 

லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் அடுத்தடுத்த படங்கள் உருவாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும்  பென்ஸ் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிக்கும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கவிருக்கிறார். நிவின் பாலி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்க இருக்கிறார். எல்.சி.யுவில் இதுவரை கார்த்தி , கமல் , ஃபகத் ஃபாசில் , விஜய் ஆகிய நடிகர்களைத் தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் இணைய இருக்கிறார். 

பென்ஸ் படத்தில் நாயகியாக நடிக்கும் மடோனா செபாஸ்டியன் 

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயின் லியோ படத்தில் விஜயின் தங்கை எலிஸா தாஸ் கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் இறந்தும் விடுகிறார். இதனால் பென்ஸ் படத்தின் கதை லியோ படத்தின் கதைக்கும் முன்பு நடப்பதாக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்துள்ளார்கள் 

கைதி 2

எல்.சி.யுவில் பகுதியா அடுத்தபடியாக கார்த்தியின் கைதி 2 படம் உருவாக இருக்கிறது. கார்த்தி சமீபத்தில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் விரைவில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்