சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவன், இன்று உலகத் தரத்தில் நடிக்கும் நடிகராக உருவாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ஒரே மகனை நீச்சல் வீரராக உருவாக்கியுள்ளார். வேதாந்த் மாதவன் பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி கண்டிருக்கிறார்.


இந்நிலையில், 2022 டேனிஷ் ஓபன் நீச்சலில் அவரது மகன் வேதாந்த் மாதவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளதாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேதாந்த் 800 மீட்டர் நீச்சல் போட்டியில் 8:17.28 வினாடிகளில் சென்று பதக்கம் வென்றார். பாராட்டு விழாவின் போது வேதாந்தின் பெயர் அறிவிக்கப்படும் கிளிப்பை அத்துடன் இணைத்துள்ளார். 






இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "கோல்ட்....உங்கள் அனைவரின் ஆதரவாலும், கடவுளின் ஆசீர்வாதத்துடனும் எனது மகனின் மாபெரும் வெற்றி தொடருகிறது. இன்று வேதாந்த் மாதவனுக்கு 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம். மிகவும் மகிழ்ச்சியாகவும் பணிவாகவும் உள்ளது" என்று எழுதினார். அந்த பதிவில், வேதாந்தின் பயிற்சியாளர், நீச்சல் கூட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த அணிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.


மாதவன் இந்த பதிவை பகிர்ந்த உடனேயே, அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக,  2022 டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண