கவிஞர் வைரமுத்துவை போன்று அவரது மகன் மதன் கார்க்கியும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ப பாடல் வரிகள் போட்டு பாடல்களை எழுதி ஹிட் கொடுத்து வருகிறார். இவரது பாடல்களை 2கே ஹிட்ஸ் நன்றாகவே எஞ்சாய் பண்ணி வருகிறார்கள்.
அந்த வகையில், அடியே அடியே இவளே, செல்ஃபி புள்ள, பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்று ஏராளமான பாடல்களை சொல்லலாம். இவருடைய டாப் 10 பாடல்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்திலிருப்பது விஜய்யின் நண்பன் படத்தில் வரும் அஸ்கு லஸ்கா என்ற பாடல் தான்.
ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பலர் நடிப்பில் 2012ல் திரைக்கு வந்த படம் நண்பன். இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில், ஒரு பாடல் தான் அஸ்கு லஸ்கா என்ற பாடல். இந்த பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ், சின்மயி மற்றும் சுவி சுரேஷ் ஆகியோர். இந்த பாடலோட ஆசிரியர் மதன் கார்க்கி. இவர் எழுதிய பாடல் தான் அஸ்கு லஸ்கா.
இந்தப் பாடலுக்காக மதன் கார்க்கி 17 மொழிகளை பயன்படுத்தியிருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த 17 மொழிகளில் உள்ள வார்த்தைகள் எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தமாம். அதுவும் காதல் என்ற ஒரே அர்த்தத்தை தான் 17 மொழியிலும் உள்ள வார்த்தைகள் விளக்குகின்றன. அப்படி 17 மொழிகளில் உள்ள வார்த்தைகளை தேடி பிடித்து எழுதியிருக்கிறார்.
Asku. laska. amour Aii asth leibe Ahaava bolingo cintha ishq meile Love ishtam premam Pyaaro என்று 17 மொழிகளில் வார்த்தைகளை தேடி பிடித்து எழுதியிருக்கிறார். அப்படி அவர் பயன்படுத்திய 17 மொழிகளில் உள்ள வார்த்தைகளும் அது எந்த நாட்டு வார்த்தை என்றும் பார்க்கலாம். Asku (டர்கிஷ் மொழி), laska (ஸ்லொவேகியா மொழி), Lamour (பிரெஞ்ச்), amour (ஸ்பேனிஷ்), Aii (சைனீஸ்) ast (ஐஸ்லேண்டிக்), leibe (ஜெர்மன்), Ahava (ஹெப்ரூ) bolingo (லிங்காலா), cintha (இந்தோனேஷியா), Ishq (அரபிக்), meile (லித்துவேனியன்) Love (ஆங்கிலம்), ishtam (தெலுங்கு), premam (மலையாளம்), Pyaaro (இந்தி), kaadhal (தமிழ்) ஆகியவை ஆகும். உண்மையில் இது ஒரு ஆச்சர்யமான தகவலாகவே பார்க்கப்படுகிறது.