மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமாவில் இவர் நினைத்தபடி வெற்றி அடையவில்லை என்றாலும், அவர் கற்றுக்கொண்ட சமையல் கலை கைவிடவில்லை. சமையல் கலையால் உலகமே இவரது கையில் அடங்கிவிட்டது. அந்த அளவிற்கு பெயரும் பெற்றிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரது சமையல் என்றால் சினிமா பிரபலங்களுக்கும் மிகவும் பிரியமாக மாறிவிட்டது. விவிஐபி வீட்டு நிகழ்ச்சிகளில் இவரது சமையல் தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
சினிமாவையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக வலம் வருகிறார். நடிப்பு, சமையல் என வாழ்க்கையில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. ஏற்கனவே இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவியா என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த திருமணம் செல்லாது என்றும் விமர்சிக்கப்பட்டது.
மேலும், ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவை அவிநாசி சாலையில் நடைபெற்ற சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. மாதம்பட்டி ரங்கராஜ் ஜாலியாக இருப்பதாகவும் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார் என்றும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது இரண்டாவது மனைவி தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அதாவதும் தங்களுக்கு குட்டி தேவதை பிறந்திருப்பதாகவும், விரைவில் வந்து பாருங்க மாதம்பட்டி ரங்கராஜ் என சமூகவலைதளத்தில் ஜாய் கிரிசில்டா அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த செய்தி அறிந்த ரங்கராஜின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.