நடிகரும், பிரபல சமையல் நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீப காலமாகவே பேசுபொருளாகி உள்ளார். திடீரென அவரது 2-வது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஆனால், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது முதல் மனைவியுடன் அவர் வந்த நிலையில், மக்கள் பெரும் குழப்பமடைந்தனர். இந்த சூழலில், தற்போது அவரது 2-வது மனைவி ஜாய் கிரிஸ்ல்டா, தனது கணவர் ராங்கராஜுடன் லிப்லாக் செய்யும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்.?
2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்‘ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனாலும், அவர் மிகவும் பிரபலமடைந்தது சமையல் மூலமாகத்தான். ஆம், பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகள் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல் என்ற நிலை வரும் அளவிற்கு அவர் திடீரென உயர்ந்தார்.
தற்போது, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக இருந்துவருகிறார். மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் தனது மனைவியை பிரியப் போவதாகவும், ஜாய் கிரிஸ்ல்டா என்பவரை காதலிப்பதாகவும் செய்திகள் அடிபட்டன.
ஜாய் கிரிஸ்ல்டா யார்.?
இந்த நிலையில், பிரபல சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்ல்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்தார். அது வைரலாக பரவி, பெரும் பேசுபொருளானது. இவரும் ஏற்கனவே திருமணமானவர் தான். பொன் மகள் வந்தாள் திரைப்பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் தான் அவரது கணவர். ஆனால், இவர்கள் 2023-ம் ஆண்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், திருமண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த கிரிஸ்ல்டா, இன்னொரு சம்பவத்தையும் செய்தார். அதாவது, திருமணம் ஆன உடனேயே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இவைகள் எது பற்றியுமே எதுவும் கூறாமல் இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
முதல் மனைவியுடன் நிகழ்ச்சிக்கு வந்த ரங்கராஜ்
இவ்வளவு சர்ச்சைகளுக்கும் இடையே, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரமும் மக்களிடம் பேசுபொருளானது.
கிரிஸ்ல்டா பகிர்ந்த லிப்லாக் வீடியோ
இப்படிப்பட்ட சூழலில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கிரிஸ்ல்டா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத் தொகுப்பை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார் கிரிஸ்ல்டா. அதில், அவர்கள் இருவரும் லிப்லாக் செய்து கொள்ளும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. தனது பதிவில், அந்த வீடியோவை எடிட் செய்தது தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தில் என்ன தான் நடக்கிறது என மக்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதற்கு அவர் தான் விடை கூற வேண்டும்.