சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா விவகாரம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது . தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகாரளித்துள்ள நிலையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் மெளனம் காத்து வருகிறார். இதனால் தனது சமூக வலைதளங்களில் பலர் அவரை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஜாய் கிரிஸில்டாவிற்கு பலர் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் இது பணம் பறிக்க ஜாய் செய்யும் நாடகம் என கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் தனியார் ஊடகத்திற்கு ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டியில் பரபரப்பான உண்மைகளை வெளியிட்டுள்ளார்
ஆதாரத்துடன் நிரூபித்த ஜாய் கிரிஸில்டா
இந்த பேட்டியில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை ஜாய் வெளியிட்டுள்ளார். " 2023 ஆம் ஆண்டு எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. எங்கள் திருமணத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் எங்களுக்கு திருமணமான விஷயம் அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. திருமணம் முடிந்து தல தீபாவளிக்கு கோயம்புத்தூர் சென்றிருந்தேன். எனது மாமியர் என் தாலியில் குங்குமம் வைத்துவிட்டு தனது மகன் இப்போதுதான் சந்தோஷமாக இருப்பதாக கூறினார். மாதம்பட்டியின் முதல் மனைவிக்கு எங்களுக்கு திருமணமான விஷயம் தெரிந்தே இருந்தது. இருந்தும் அவர் இதுகுறித்து எதுவும் கேட்கவில்லை. அப்போதே கேட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. திருமணமாகி இந்த வீட்டில் தான் நாங்கள் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தோம். இந்த வீட்டில் லீஸ் பத்திரத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்றுதான் இருக்கிறது. அதில் அவர் கையெழுத்தும் போட்டிருக்கிறார்" என ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.
குழந்தையை கலைக்க சொன்னார்
"பெண் குழந்தை வேண்டும் என்று மாதம்பட்டி ஆசைப்பட்டார். ஆனால் அந்த குழந்தை கருவிலேயே கலைந்துவிட்டது. அதன் பிறகு இரண்டாம் முறையாக நான் கருவுற்றேன். இந்த குழந்தை பிறந்தாள் இந்த திருமணம் அதிகாரப்பூரவமானதாக ஆகிவிடும் என்பதால் குழந்தையை கலைக்கச் சொன்னார். ஆனால் குழந்தையை கலைத்தால் அது என் உயிருக்கே ஆபத்தானதாகி விடும் என்று சொல்லிவிட்டார். குழந்தையை கலைக்க முடியாததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அப்போது நான் என் உயிரைப் பற்றி கவலைப்படாமல் குழந்தையை கலைக்க சம்மதித்தேன். எல்லாரும் நான் மாதம்பட்டியிடம் பணம் பறிப்பதற்காக இந்த புகாரளித்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி நினைக்கு நான் எப்படி என் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அதை சொல்லியிருக்க முடியும்