இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளதாவது, "சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தையே முடக்கியது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்குவதற்கு சமம்.
அதேவேளையில் திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பைரசி போன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசை நாம் வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இதுவரை எந்த தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமர்சனம் குறித்து எடுக்கப்பட்ட வெகு வேகமாக நடவடிக்கை போல்
நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருபவர்கள் மீதும் திரைப்படங்களை பைரசி செய்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுப்பபட்டால் நன்றாக இருக்கும். என கூறியுள்ளார்.