நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'மாவீரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



 


அமோக வரவேற்பை பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் :


நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மண்டேலா'. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வின் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'மாவீரன்'. சமீபத்தில் தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹேர் ஸ்டைலை போல சிகையலங்காரம் செய்திருந்த சிவகார்த்திகேயனின் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். 






மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது :


மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த 'மாவீரன்' படத்தின் பாதி படப்பிடிப்பு 40 நாட்களில் நடைபெற்று முடிவடைந்துவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 30 நாட்கள் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாக சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம் சொல்லப்படுகிறது.







எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற 'பிரின்ஸ்' திரைப்படம்:


தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக உலகளவில் வெளியானது 'பிரின்ஸ்' திரைப்படம். இப்படம் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதன் காரணமாக சில காட்சிகளை மாற்ற சொல்லி அப்படத்தின் இயக்குனர் கே.வி. அனுதீப்பிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டு கொண்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காரணத்தால் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான டான் மற்றும் டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்து நல்ல வசூலையும் ஈட்டியது. அதனை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. இந்த பிரச்சனைகள் விரைவில் முடிவடைந்து 'மாவீரன்' படம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பது தான் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ஆதங்கம்.