‘கணம்’ படத்திற்காக நடிகர் கார்த்தி பாடிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 


டீரிம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘கணம்’. இந்தப்படம் தெலுங்கில்  ‘ஒகே ஓக்க ஜீவிதம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நாகர்ஜூனாவின் மனைவியும், 80 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அமலா நடித்துள்ளார். ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சதிஷ், ரமேஷ் திலக், நாசர், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


 


                                                       


ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்திற்குசுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அண்மையில் இந்தப்படத்தில் நடிகர் கார்த்தி  ‘மாறிபோச்சோ’ பாடல் பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


 


                                                     


 


 


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை, 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படத்தை இயக்கிய இயக்குவர் ராஜு முருகன் இயக்குகிறார். இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.


புதிய கதாபாத்திரம் 


இதுவரை கார்த்தி ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


 






இந்தப்படம் குறித்து விருமன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த இயக்குநர் ராஜூமுருகன்  “என்னோட கதை சொல்றதுக்காக நான் கார்த்தி சார சந்திக்க தேனி போயிருந்தேன். ஒரு கதை அதன் சனங்களை பற்றி பேசும் போது முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது. கார்த்தியோட அடுத்தப்படம் பண்ணப்போறேன். அந்தப்படம் சினிமாவில் எனக்கு லெர்னிங் ப்ராசஸா இருக்கும். அவர்கிட்ட நிறைய கத்துக்கிறேன். எப்போது ஃபுல் சார்ஜ் போட்ட பேட்டரி மாதிரி இருப்பாரு. அவர் பின்னாடி ஓடுறது ரொம்ப பெரிய டாஸ்க். சமூகத்திற்கு தேவையான உழவன் அறக்கட்டளை மூலம் நல்ல விஷயங்களை செய்யும் நல்ல மனிதர். அவரோட அடுத்தப்படத்தில் இணைவது பெருமையாக இருக்கு” என்று பேசினார்.