இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட இரு படங்கள் தக் லைஃப் மற்றும் கூலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில் அடுத்த 4 மாதங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாத நிலையில் ரசிகர்களின் கவனம் சின்ன பட்ஜெட் படங்கள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு திரும்பியுள்ளன. அந்த வகையில் கடந்த இரு மாதங்களில் வெளியான சூப்பர் மற்றும் சுமார் படங்கள் இந்த மாதம் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரு தமிழ் படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்கள்.
மாரீசன்
வடிவேலு , ஃபகத் ஃபாசில் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் திரையரங்கில் வெளியான படம் மாரீசன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கினார். கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழ் மற்றும் பிற மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகயுள்ளது.
தலைவன் தலைவி
கடந்த ஆண்டு மகாராஜா பட வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு தலைவன் தலைவி என்கிற கமர்சியல் வெற்றியைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெயினராக உருவான இப்படம் உலகளவில் ரூ 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. திரையரங்கத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது
F1
அண்மையில் வெளியாகி உலகளவில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த படம் பிராட் பிட் நடித்த F1 . கார் பந்தையத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தொழில் நுட்பத் தேர்ச்சிக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. வரும் ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் தளத்தில் கட்டணம் முறையில் இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம்
மிஷன் இம்பாசிபள்
மிஷன் இம்பாசிபள் படவரிசையில் இறுதி பாகமாக வெளியான படம் இஷன் இம்பாசிபள் : த ஃபைனல் ரெக்கனிங். கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம்.