மாமன்னன் பட வெளியீட்டுக்கு முன் நடிகர் தனுஷ் தொடங்கி, பட வெளியீட்டுக்குப் பின் பலர் மத்தியிலும் பேசுபொருளாகி கவர்ந்தது அப்படத்தின் இண்டர்வெல் ப்ளாக் காட்சி. இந்நிலையில் இந்தக் காட்சி இணையத்தில் பாராட்டுகளைப் பற்றி நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இந்தக் காட்சி குறித்த சுவாரஸ்யத் தகவல்களை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.


மாமன்னன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுடன் உரையாடினர். அப்போது அவர் பேசியதாவது:


இது என் கடைசி மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50ஆவது நாள் விழா உண்டு. சாண்டி மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா நிற்பார். அவர் என்ன பண்ணாலும் இயக்குநருக்கு பிடிக்காது.


காதில் பஞ்சு


திலீப் மாஸ்டரும் இப்படிதான். இண்டர்வெல் ப்ளாக் சண்டை பத்தி நிறைய பேர் பேசுகிறார்கள், அந்த ஃபைட் மூன்று நாள்களுக்கு திட்டமிட்டு முடிக்க முடியாமல், தொடர்ந்து 4 நாள்கள் தாண்டி இழுத்து, 5ஆவது நாள் முடிந்தது. 


5ஆவது நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் திலீப் மாஸ்டரிடம் உண்மைய சொல்லுங்க முடிஞ்சதா எனக் கேட்டேன்.  அவர் முடிஞ்சதுன்னு சொன்னதும் என் காதில் இருந்த பஞ்சை எடுத்து வைச்சிக்கோங்க மாஸ்டர்னு கொடுத்துட்டு வந்தேன். 


டம்மி பொருள் உபயோகிக்கல


தேனி ஈஸ்வர் சார் ஒரு பக்கம் நான் தான் கேமரா மேன் எனக் கத்துவார். மாரி சார் ஒரு பக்கமும், திலீப் மாஸ்டர் ஒரு பக்கமும் கத்துவார்கள். இப்படி நாங்கள் ரொம்ப ஜாலியா எடுத்தோம், சண்டைக் காட்சி முடிஞ்சது நினைச்சப்போ மறுபடி ரெண்டு மூணு ஷாட் வேணும்னு சொல்லி எடுத்தாங்க. எடிட்டருக்கு நன்றி.


ட்ரெய்னிங் செண்டர்களை அடிக்கும் காட்சியில் நானும் கீர்த்தியும் வேகமாக அனைத்து பொருள்களையும் அடிப்போம். டம்மி கேட்டால் இவர்கள் ஒன்று சொன்னார்கள். இந்தப் படத்தில் எந்த டம்மி பொருள்களையும் உபயோகிக்கவில்லை. துப்பாக்கி தவிர அத்தனையும் ஒரிஜினல்.


பூந்தொட்டியை எடுத்து அடிக்கும்போது கேமரா மேனின் அசிஸ்டெண்ட் என் கண் முன்னாடியே தலையில் அடிபட்டு விழுந்தார். நிறைய காட்சிகளில் இப்படி நிறைய பேருக்கு அடிபட்டது.


உதவி இயக்குநர்கள அடிக்கல...


அழகம்பெருமாள் என் முதல் படத்தில் எனக்கு அப்பா. இந்தப் படத்தில் வில்லனுக்கு அப்பா. நீங்கள் எனக்கு ஸ்பெஷல். படம் நடித்த அனைவருமே இண்டர்வியூ கொடுத்துவிட்டார்கள். நான் இவர்களெல்லாம் படடத்தில் நடித்திருக்கிறர்களா எனக் கேட்டேன். இந்தப் படத்தை எவ்வளவு ஆழமான படமாக பேசுகிறார்களோ, அதற்கு நேர்மாறாக ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும்.


அசிஸ்டெண்ட்  டைரக்டர்களையெல்லாம் தனியா கூப்பிட்டு இண்டர்வியூ செய்தார்கள். எங்க டைரக்டர் எங்கள அடிக்கல அடிக்கலனு சொன்னார்கள். அடிக்கிறேன்ங்கற வார்த்தைய மட்டும் உபயோகிக்காதீங்கனு மாரி செல்வராஜ் கேட்டார்.