மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு  உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு உள்ள நிலையில், இந்த படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த படம் தனது கடைசிப்படம் என கூறியுள்ளார். 


ஏஞ்சல் படத்துக்காக இதுவரை ரூ.13 கோடி செலவு செய்யப்பட்டது. இந்த படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் அதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். எனவே எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். மேலும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 


கடந்த வாரம் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை ஒத்தி வைத்தது.


இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 


மாமன்னன் திரைப்படம் இயக்குனர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் முக்கிய வேடத்தில் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாமன்னன் படமானது இன்று வெளியானது. 


முன்னதாக படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் மாமன்னன் படத்தொன்   ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி  மாமன்னன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.  


மேலும் படிக்க 


Maamannan: 'அனைவருக்கும் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது' .. மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு


Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம்