Maamannan Audio Launch LIVE: ’மாமன்னன்’ படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா... லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Maamannan Audio Launch LIVE Updates: இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.
கவின்
”எனக்கு வடிவேலு-ன்னா உயிர். அவரை பார்க்கவே இந்த நிகழ்ச்சிக்கு வர முக்கியமான காரணம். அப்புறம் மாரி அண்ணன். அவரோட படங்களை பத்தி பேசிட்டு இருந்தோம். இந்த படத்தோட அறிவிப்பு வெளியான போதே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உதய் இன்னைக்கு தான் நேர்ல பாக்குறேன். படம் தாண்டி அவர் பேசுற விஷயம் எல்லாம் பிரதீப் சொன்ன மாதிரி வேற மாதிரி தான் உதயநிதி ஸ்டாலின்.”
விஜய் ஆண்டனி
“எல்லோரும் உதயநிதி போறாங்க ன்னு வருத்தப்படிராங்க. நான் சந்தோஷமா வழி அனுப்ப வந்துருக்கேன். நீங்க இனிமே வராதிங்க
போயிருங்க. நீங்க சாதிச்சிட்டிங்க உதய்.”
பிரதீப் -
”இப்ப நான் என்ன சொல்றது. இந்த வாழ்க்கைல எல்லா நேரங்களும் வடிவேலு வசனங்களால் நிறைந்துள்ளது. அது ஒரு தனி மொழி. எனக்கு அவருடன் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.
வாரத்துக்கு ஒரு முறையாது ரஹ்மான் பத்தி பேசுவேன், பாட்டை கேப்பேன். பஹத் கூட வேலை பார்க்க ஆசைப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்துல இருந்தே மாரி வொர்க் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். கவனிச்சேன்.
எனக்கு உதயநிதியுடன் 2,3 டைம் பேசிருக்கேன். யாராக இருந்தாலும் அவருக்கு சமமாக தான் பேசுவாரு. அவர் படம் நல்ல இல்லைன்னா நல்லா இல்லன்னு சொல்றாரு. அவர் படமாக இருந்தாலும் வெளிப்படையா பேசுவாரு. அது எனக்கு பிடிக்கும். கீர்த்தி சுரேஷ் நிங்க ரொம்ப அழகா இருக்கீங்க.”
விக்னேஷ் சிவன்
”மாரி வந்து நான் உதவி இயக்குனராக வேலை பார்த்து இருந்த டைம்-ல இருந்து தெரியும். அவரிடம் ரொம்ப ஃப்ரீயா பேசுவேன். அப்படி பேசி தான் 2 வருசம் பேச முடியாமல். போயிடுச்சி. உதய்-க்கு இந்த படம் சினிமா கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும். வடிவேலு முன்னாடி பேசுறது சிறந்த விஷயம். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.”
மாரி முதல் படத்துல இருந்து அவரின் வேலையை விரும்பி பார்கிறேன். அவர் செய்த மிகப்பெரிய விஷயம். வைகைபுயல், இசைப்புயல் இளம் புயல் 3 பேரையும் ஒன்றாக சேர்த்தது தான். தியாகராஜா குமாரராஜா
மிஷ்கின்
”இந்த மேடை முக்கியமானது. மாரி 2 படத்திலேயே 20 படத்துக்கான பெயர் வாங்கிருக்கன். He is one of the greatest director in India ன்னு சொல்லுவேன். A R rahman, இளையராஜா-க்கு அடுத்து ஒரு ஜூனியஸ் என சொல்வேன். ஆவர் ரொம்ப நாள் வாழ்த்து இசையில் நம்ம மகிழ்விக்கணும்
வடிவேலு அடுத்த ஜீனியஸ். கமலை வச்சிகிட்டு இதை சொல்றேன். நாகேஷ் அடுத்தப்படியாக உடல் மொழியை வைத்து நகைச்சுவை பண்ணியவர்.
உதய் சினிமாவை விட்டு போக வேண்டாம். இந்த மாதிரி ஒரு படத்தை அரசியல்ல எடுக்க வேண்டாம். இனிமேல் படம் பண்ணா மாமன்னன் மாதிரி படம் பண்ணுங்க. சைக்கோ மாதிரி பண்ணாதீங்க. தயவு செய்து சினிமாவை விட்டு போகாதீங்க. நான் வேணும்னா அம்மாகிட்ட பேசுற. வருசத்துல ஒரு 40,50 நாள் மட்டும் வந்து நடிங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்
நான் கமல் பத்தி பேசல. ஏன்னா என்னோட ஒருநாள் கமல் பத்தி பேசாம போனது இல்ல. அப்போது மிஷ்கின் கேட்டு கொண்டதால் அனைவரும் எழுந்து நின்று கமலுக்கு கை தட்டல் கொடுத்து மகிழ்வித்தனர்.”
மிஷ்கின்
”இந்த மேடை முக்கியமானது. மாரி 2 படத்திலேயே 20 படத்துக்கான பெயர் வாங்கிருக்கன். He is one of the greatest director in India ன்னு சொல்லுவேன். A R rahman, இளையராஜா-க்கு அடுத்து ஒரு ஜூனியஸ் என சொல்வேன். ஆவர் ரொம்ப நாள் வாழ்த்து இசையில் நம்ம மகிழ்விக்கணும்
வடிவேலு அடுத்த ஜீனியஸ். கமலை வச்சிகிட்டு இதை சொல்றேன். நாகேஷ் அடுத்தப்படியாக உடல் மொழியை வைத்து நகைச்சுவை பண்ணியவர்.
உதய் சினிமாவை விட்டு போக வேண்டாம். இந்த மாதிரி ஒரு படத்தை அரசியல்ல எடுக்க வேண்டாம். இனிமேல் படம் பண்ணா மாமன்னன் மாதிரி படம் பண்ணுங்க. சைக்கோ மாதிரி பண்ணாதீங்க. தயவு செய்து சினிமாவை விட்டு போகாதீங்க. நான் வேணும்னா அம்மாகிட்ட பேசுற. வருசத்துல ஒரு 40,50 நாள் மட்டும் வந்து நடிங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்
நான் கமல் பத்தி பேசல. ஏன்னா என்னோட ஒருநாள் கமல் பத்தி பேசாம போனது இல்ல. அப்போது மிஷ்கின் கேட்டு கொண்டதால் அனைவரும் எழுந்து நின்று கமலுக்கு கை தட்டல் கொடுத்து மகிழ்வித்தனர்.”
கிருத்திகா “என்னை stage la எத்த வேண்டாம் என சொன்னேன். ஆனால் மேடை ஏறி விட்டேன். உதய் என்னை impress பண்ணிட்டாரு. படம் 2 நாளைக்கு முன்னாடி பார்த்தேன். வடிவேலு தான் இந்த படத்தோட ஹீரோ.’என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் விழாவிற்கு வருகை!
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு பல்வேறு நட்சத்திரங்கள் வருகை தந்துள்ளனர்.
பா.ரஞ்சித் உரை:
”ஜெய்பீம் என்று பேச்சை தொடங்கினார். மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் படம் பண்ணும்போது பயமில்லை. ஆனால் பரியேறும் பெருமாள் படம் செய்யும்போது பயமாக இருந்தது. மாரி செல்வராஜ் உருவாக்கிய படைப்பை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்இருந்தது. இயற்கையாகவே அப்படம் மக்களிடம் சென்று சேர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையும் அதற்கு உதவியது. அம்பேத்கார் போட்டோ காட்டினால் மதுரை பற்றி எரியும் என்றார்கள். ஆனால் திரையரங்குகளில் மக்கள் கூடி கொண்டாடினர். பரியேறும் பெருமாள் பண்ணும்போது நிறைய பிரச்சினை இருந்தது. மக்கள் மட்டுமின்றி திரை கலைஞர்களும் உதவினர். அரசியல் பின்புலம் இருந்தாலும் மாரி செல்வராஜ் உடன் உதயநிதி இணைந்தது ரொம்ப நன்றி. ஏஆர் ரகுமான் மற்றும் வடிவேலுக்கு நன்றி. வடிவேலு கதாபாத்திரம் ஒர்க் அவுட் ஆகும் என்றார் மாரி செல்வராஜ். இதுவும் அரசியல் கதைதான் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் நடிகர் உதயநிதி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் வருகை.
வடிவேலு ரெட் கார்பெட் உரை:
”நடிகர் வடிவேலுவிடம் ‘ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார் வடிவேலு.
அவர் கூறுகையில்,” எங்கே நேரு ஸ்டேடிவத்திற்கா...? என்று சொல்லி புன்னகைத்தார்.
” நான் உங்க பாக்கெட்டில் உள்ள செல்போனில் இருக்கிறேன். எந்நேரமும் நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ் உருவாக்கும் மீம்களால் உங்களோடு இருக்கிறேன். ’ என்று கூறினார்.
சிறந்த நட்சத்திரங்கள் எல்லாரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். உங்க வீட்டுப் பிள்ளை நானு. எல்லாரும் இதில் நடித்திருக்கிறோம். நல்ல கதைக்களம் உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் நடித்ததற்கு பெருமையடைகிறேன். இது எல்லோர் வாழ்விலும் கனெட்க் ஆகும் கதையாக இருக்கும். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என்னை இந்தப் படத்தில் பாட வைத்திருக்கிறார். மறைந்த என்னுடைய தாய்,என் அம்மா, என்னை பாட தூண்டி, ஊக்கம் கொடுத்து, வெற்றியை கொடுத்திருக்கார். என் தாயை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்கிறேன்.”
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு கதாநாயகன் நடிகர் வடிவேலு வருகை. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் ரெட் கார்பெட் உரையில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், என் திரைப்படங்கள் எப்போதும் சமூகநீதி பேசும். மாமன்னன் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.” என்று பேசியுள்ளார்,
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. மற்றும் ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்நிலையில், 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழா அரங்கத்தின் நுழைவாயிலில் அம்பேத்கர், பெரியார், சேகுவாரா, கருணாநிதி, அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல தலைவர்களின் வாசகங்களுடன் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழா அரங்கத்தின் நுழைவாயிலில் அம்பேத்கர், பெரியார், சேகுவாரா, கருணாநிதி, அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல தலைவர்களின் வாசகங்களுடன் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த, நடிகர் வடிவேலு பாடியுள்ள 'ராசாகண்ணு’ என்ற பாடல் இசை வெளியீட்டு விழாவில் அவர் குரல் இரண்டு வரிகளில் பாடுவாரா என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நட்சத்திர பட்டாளமே பங்கேற்கும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஆறு மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் இன்று மாலை 7.30 மணிக்கு படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும் என ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தெரிவித்துள்ளது.
மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்கிற பாடலை விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள மன்னா மாமன்னா பாடலை பிரபல தமிழ் ராப் பாடகர் அறிவு பாடியுள்ளார்.
மாமன்னன் படத்தில் இடம்பெறும் பாடல்களின் பட்டியலை ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். ஏற்கெனவே ராசாக்கண்ணு, ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், கொடி பறக்குற காலம், நெஞ்சமே, உச்சந்தல, மன்னா மாமன்னா, வீரனே ஆகிய 5 பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
மாமன்னன் படத்தில் இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் கருப்பு - வெள்ளை காட்சிகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாமன்னன் படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான் படத்தின் பேசுபொருளாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் உற்சாகமாக இது குறித்து ட்வீட் செய்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் பங்கேற்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
Background
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு , உதயநிதி ஸ்டாலின் , ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். ‘இசைப்புயல்’ எனக் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி செப்டெம்பர் மாதம் முடிவடைந்தது. 110 நாள்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இந்த மாதம் 29ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகத் தொடங்கி, நடிகராக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், முழுமையாக அரசியலில் பிரவேசிக்க முடிவெடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘மாமன்னன்’ திரைப்படம் தான் தன் இறுதிப்படம் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இச்சூழலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளதாகவும், பெரும் திரளாக நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ட்வீட் செய்துள்ளார். முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் 2 பாடல்களும் (வடிவேலு பாடிய ராசாக்கண்ணு பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ஜிகு ஜிகு ரெயில் பாடல்) வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இப்படத்தில் டைட்டில் கதாபாத்திரமான மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவும், உதயநிதி ஸ்டாலின் ராசாக்கண்ணு கதாபாத்திரத்திலும், ஃபஹத் ஃபாசில் பெருமாள் வைகுண்டம் எனும் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் சம்பா எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் தவிர, கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -