சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா 'மாமனிதன்' திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 


இந்தப் படத்தில் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது.




இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இடம்பெற்ற தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் பாடல் சூப்பர் ஹிட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 






இந்நிலையில் மாமனிதன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநரான சீனு ராமசாமியும், கதாநாயகன் விஜய் சேதுபதியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர். படம் வெளியிடப்படும் தேதி விரைவில் தெரிவிக்கப்படுமென தெரிகிறது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண