பிரபல தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அண்மையில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அவருக்கு விழா எடுத்தது. அவர் தொகுத்து வழங்கும் சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் இதற்காக அவருக்கென ஒரு குறும்படம் திரையிடப்பட்டது.அதில் அவருடைய சின்னத்திரை மற்றும் பெரியத்திரை வாழ்க்கையை குட்டிக் குட்டி ஃப்ரேம்களாகப் பதிவு செய்திருந்தனர்.
மற்றொரு பக்கம் அவரது மனைவி சூசனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சூசனிடம் அவருடைய கணவரிடம் உள்ள சீக்ரெட் என்னவென்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த சூசன்,’தான் தப்பே செய்யலைனாலும் கால்ல விழத் தயங்கமாட்டாரு’ எனச் சொல்லவும் அரங்கமே அதிர்ந்து சிரித்தது.
இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காட்சியும் இது குறித்த ப்ரோமோவில் பதிவாகியுள்ளது.மா.கா.பா ஆனந்த் ரேடியோ ஜாக்கியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.