பரபரப்பான ரியாலிட்டி ஷோவாக இந்தி ரசிகர்களைக் கவர்ந்த எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவானது, தற்போது எம்.டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகை சன்னி லியோனும், தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இந்த வார இறுதி எபிசோடில் மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியானது, திகைப்பூட்டும் உடைகள், அவதூறான வதந்திகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக் குவியலான ரோலர் கோஸ்டர் போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குத் தரும் என்பது நிச்சயம். காஷிஷ் செய்யும் கடந்தகால யுக்திகள் குறித்த தொடர் உரையாடல்கள் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அதே நேரத்தில் டாக்டர் அரிகாவைப் பற்றிய அட்டியின் சந்தேகங்கள் விவாதத்துக்கு வழிவகுக்கின்றன.


மேலும், சன்னி ஆரக்கிளுக்கு தனது துணையைத்  தேர்ந்தெடுத்து அவரை வெளியேற்றுகிறார். இந்த நேரத்தில் ஆதித், மிஸ்சீஃப் (குறும்பு) பெட்டியைத் திறந்ததும், அதிர்ச்சி அலைகள் அரங்கத்தில் உருவாகின்றன.
ஆனால் உண்மையான குழப்பம், குறும்புக்காரரான உர்பியின் (Uorfi)  வருகையுடன் தொடங்குகிறது.


பாதுகாப்பான பக்கத்தில் உள்ள தகுந்த போட்டியாளர்களை அவர் கண்காணிக்கிறார். பின்னர் அவர் கூறும்போது, “இந்தப் பக்கத்தில் எனக்கு சரியான துணை இல்லை என்று தோன்றுகிறது. எனவே உங்கள் பக்கத்துக்கு வந்து குழப்பம் செய்ய விரும்புகிறேன்" என்கிறார்.


முன்னாள் காதலர்கள், காதலிகளின் நுழைவு இது வில்லாவைத் தலைகீழாக மாற்றியது. மேலும் மோதல்களின் துவக்கத்தையும் தூண்டியது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது காதல் முறிவு மற்றும் அதிர்ச்சிகரமான கடந்த காலங்களைப் பற்றி பேசுவதால், ஸ்ப்ளிட்ஸ்வில்லா மற்றும் எக்ஸ்-ஐல் உள்ளவர்களுக்கு இடையே ஒரு கடுமையான சண்டையாக பதற்றங்கள் அதிகரிக்கின்றன.


ஆனால் இந்த நாடகம் அதோடு முடிவடையவில்லை. அடுத்த நாள் உர்பி (Uorfi- The Mischief Maker), நீதிமன்ற அறை அமர்வுக்கு ஏற்பாடு செய்ததால், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, உணர்ச்சிகள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் காதலர்கள், காதலிகள் தங்கள் வழக்குகளை வாதாடுவதற்காக தயாராக நிற்கின்றனர்.


காதலர்கள், காதலிகள் கண்ணீர் சிந்துகின்றனர். இதயங்கள் உடைந்தன, உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது அங்குள்ள ஜோடிகள் பரிசோதிக்கப்பட்டனர். முன்னாள் காதலர்கள், காதலிகள்  ஒருவரையொருவர் எதிர்கொண்டு கேள்விகளை எழுப்பினர். இந்த வியத்தகு மோதலில் தங்கள் பிரச்சினைகளை அவர்கள் வெளியுலகுக்குக் கொண்டு வருகின்றனர். புறக்கணிப்பு மற்றும் துரோக குற்றச்சாட்டுகள் முதல் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு வரை, ஒவ்வொரு மோதலும் உக்கிரமான தீவிரத்துடன் ஸ்பிளிட்ஸ்வில்லாவில் வெளிப்பட்டது.


இந்த வார இறுதியில் உணர்ச்சிகள், கண்ணீர் மற்றும் வாக்குவாதங்களுடன் நிகழ்ச்சி முடிந்தது. ஆனால் இதைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் பாகங்களில் புதிய விதமான இலக்குகள் மற்றும் புதிய குறும்புகளுடன் அதிக அளவிலான நாடகங்கள் அரங்கேறும்.