மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன்
பாடகர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகாவிற்கு கடந்த சில மாதங்கள் முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது முதல்முறையாக சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகள்களுக்கு காதல் கன்னிகா சினேகன் மற்றும் கவிதை கன்னிகா சினேகன் என பெயரிட்டுள்ளார் .
எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும். வணக்கம்.. எங்கள் இரட்டை மகள்கள் 1,காதல் கன்னிகா சினேகன் . 2,கவிதை கன்னிகா சினேகன் . இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு.. எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் .. நன்றி என்றும் நட்புடன் .. சினேகன் கன்னிகா சினேகன் என பதிவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் மகள்களின் புகைப்படங்களை வெளியிடுள்ளார்
பாடலாசிரியராக சினேகன்
1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே படத்தின் மூலம் பிரபலமானவர் சினேகன். பின் மெளனம் பேசியதே , பாண்டவர் பூமி , சொக்கத்தங்கம் , சாமி , ஆட்டோகிராஃப் , பருத்திவீரன் , ராம் ,சூரரைப் போற்று , ஆடுகளம் , உள்ளிட்ட 45 படங்களுக்கும் மேல் சினேகன் எழுதிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. கிராமிய வாழ்க்கையை கிராமப்புற நிலத்தில் வாழும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக சினேகனின் பாடல்கள் அமைந்திருப்பதால் இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலைத்த இடம் இருந்து வருகிறது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன் வெளியே வந்ததும் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். குழந்தை பிறந்த தகவலை தெரிவித்ததோடு தனது மகள்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்த சினேகன் தற்போது தனது மகள்கள் மற்றும் மனைவியுடன் அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்