லைகா தயாரிப்பு நிறுவனம், நாளை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடவுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, மணிரத்தினம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என, பெரும் நடிகர் பட்டாளமே அப்படத்தில் நடித்தது.
திரையரங்களில் கோடிக்கணக்கான வசூலை குவித்த இப்படம், ஓடிடி தளமான அமேசன் ப்ரைமிலும் வெளியானது. தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பும் முன்னதாகவே நடந்து முடிந்தது.
தற்போது, லைகா தயாரிப்பு நிறுவனமானது முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில், நாளை மாலை 4 மணிக்கு முக்கியமான ஒரு தகவல் வெளியாகவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டாக இருக்கலாம் அல்லது இரண்டாம் பாகத்தின்ரிலீஸ் தேதி மாற்றம் குறித்தும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விநியோகத்தை வாங்கியிருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதில் எது உண்மை என்பது நாளை 4 மணிக்கு தெரிந்துவிடும்.
பொன்னியின் செல்வனின் பாடல்கள் :
இந்த படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் படத்தின் ரிலீஸிற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்றது. சொல் என்ற பாடல் மற்றும் படத்தில் இடம்பெறாமல் இருந்தது. அதனால் மக்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். அவர்களின் குறையை தீர்க்கும் வகையில் சொல் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.