Manikandan: லவ்வர் படத்தில் நடித்த மணிகண்டன் உட்கார்ந்தபடி தூங்கி கொண்டிருக்கும்போது, அவரை ஸ்ரீகௌரி பிரியா எழுப்பி விடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


லவ்வர் படம்:


ஜெய்பீம் மற்றும் குட்நைட் படங்களின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். இன்று திரைக்கு வந்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். படத்தில் மணிகண்டனுக்கு ஹீரோயினாக  ஸ்ரீகௌரி பிரியா நடித்துள்ளார். காதலையும், அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் கூறும் லவ்வர் படம் இன்று திரைக்கு வந்து வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்த நிலையில் லவ்வர் படத்தில் நடித்த ஸ்ரீகௌரி பிரியா, உட்கார்ந்த படி அசதியில் தூங்கும் மணிகண்டனை தாடியை பிடித்து ஸ்ரீ கௌரி பிரியா எழுப்பி விடுகிறார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தனது டிவிட்டரில் பகிர்ந்த மணிகண்டன், ஸ்ரீகௌரி பிரியாவுடன் மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார். 






மேலும் படிக்க: Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு - விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!


Lover Movie Review: காதலில் பிரச்சினை காதலர்களா, தவறான புரிதலா? மணிகண்டனின் "லவ்வர்" பட விமர்சனம் இதோ!