லவ்வர் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அம்மாவை நினைத்து கெளரி ப்ரியா அழுத நிகழ்வை மணிகணடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.


லவ்வர்


அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான படம் லவ்வர். இப்படத்தில் மணிகண்டன்  கதாநாயகனாகவும் ஸ்ரீ கெளரி ப்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று வாரங்களுக்கும் மேலாம் திரையரங்கில் வெற்றிகரமாக படம் ஓடிவரும் நிலையில் இதுவரை 7 கோடிக்கும் மேலாக வசூல் எடுத்துள்ளது. 


இப்படத்தில் நடிகர் மணிகண்டனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி ப்ரியாவும் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னதாக மாடர்ன் லவ் சீரிஸில் ராஜூ முருகன் இயக்கிய லாலாகுண்டா பொம்மைகளில் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் மேட், மற்றும் மெயில் உள்ளிட்ட இவர் நடித்தப் படங்கள் பெரும் வெற்றிபெற்றன. கெளரி ப்ரியா குறித்த முக்கியமான தகவல் ஒன்றை சமீபத்தில் நடிகர் மணிகண்டன் பகிர்ந்துகொண்டுள்ளார்.


அம்மாவை நினைத்து அழுத கெளரி ப்ரியா






” இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் கெளரி ப்ரியாவின் முகம்.  லவ்வர் படத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு சரியாக இரண்டு மாதங்கள் முன்பு கெளரி ப்ரியாவின் அம்மா தவறிவிட்டார். நாங்கள் முதல் நாளில்  நடிப்பு பயிற்சியை தொடங்குபோதே அவர் பயங்கரமாக அழுதுவிட்டார்.  அதே போல் ஒரு நால் நைட் ஷூட நடக்க இருந்தபோது கண்கலங்கி பயங்கரமாக அழத்தொடங்கினார். நாங்கள் அடுத்த ஷாட் எடுப்பதற்கான வேலைகளில் இருந்தோம். விசாரித்தபோது மிக சரியாக மூன்று மாதங்கள் முன்பு அதே நேரத்தில் அவரது அம்மா இறந்ததாக அவர் தெரிவித்தார். அப்படியான நேரத்தில் ஷாட் ரெடி என்று சொல்ல எங்களுக்கு மனசு இல்லை. அதனால் அவர் அமைதியாவது வரை நாங்கள் அனைவரும் அவருக்காக காத்திருந்தோம். ஆனால் கெளரி ப்ரியா நாங்கள் எல்லாரும் அவருக்காக காத்திருக்கிறோம் எனபதால் கெளரி எங்களிடம் வந்து ’நான் ப்ரோபஷன்னல் கிடையாது  என்னுடைய பிரச்சனைகளை உங்களை பாதிக்க விடுகிறேனா என்று  மன்னிப்பு கேட்பார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று நாங்கள் அவரிடம் உறுதியளித்தோம் . எந்த வகையிலும் அவர் பாதிக்கப் பட்டுவிடக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கமாக இருந்தது. “ என்று மணிகண்டன் தெரிவித்தார்.