மணிப்பூர், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற நிகழ்வு குறித்தான தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்


மணிப்பூர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை:


மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகும் கூட, அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்களை  மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  


குவியும் கணடங்கள்:


இந்தச் சம்பவத்திற்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் உத்தரவிட்டுள்ளார்.  பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.


குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்






இந்நிலையில், கோமாளி, லவ் டுடே ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்தக் கொடுமையான நிகழ்வு குறித்து  ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவம் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை நினைத்தால் என் இதயம் பதைபதைக்கிறது.


இந்த மாதிரியான மனிதத்தன்மை அற்ற செயல்கள் இனி நடக்காமல் இருக்கு இதுவரை கொடுக்காத தண்டனையை வழங்க வேண்டும் . பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டு வருவதற்கு எனது பிரார்த்தனைகள்” எனப் பதிவிட்டுள்ளார் பிரதீப். மணிப்பூர் விவகாரம் குறித்து சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.