கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான “லவ் டுடே” படம் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

Continues below advertisement



கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குநரே, கதாநாயகனாக நடித்துள்ளார். வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையை விட வார நாட்களில் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது என்றும், இந்த படம் வசூல் ரீதியாக புது சாதனையை படைக்கபோகிறது என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலும், அறிமுக ஹீரோக்களுக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பது அரிது. ஆனால் இது போன்ற கருத்தை, பிரதீப் “லவ் டுடே” படம் மூலம் சுக்கு நூறாக உடைத்துள்ளார்.
 






 


இந்த படமானது, மற்ற பெரிய ஹீரோக்களின் படத்தை விட நன்றாக வசூல் செய்கிறது என்ற கருத்து திரையுலக வட்டாரத்தில் நிலவி வருகிறது.அதற்கு ஏற்றவாரு, அஜித் மற்றும் விஜய்க்கு அடுத்துள்ள சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு ஆகிய ஹீரோக்கள் உள்ளனர். 
இந்த பட்டியலில் உள்ள சூர்யாவை தவிர்த்து 2022-ல் வெளியான அனைத்து ஹீரோக்களின் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. பகிரப்பட்ட அந்த ட்வீட்டிற்கு கீழே, “தாக்கப்பட்டாரா சூர்யா” போன்ற கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


”லவ் டுடே” படம், பல திரையரங்குகளில் இன்றளவும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள், மீண்டும் மீண்டும் தியேட்டர் வாசலில் குவிந்து லவ் டுடேவை தரிசனம் செய்து வருகின்றனர்.


லவ் டுடே படக்குழுவினர் :






பிரதீப்பிற்கு ஜோடியாக நாச்சியார் மற்றும் ஹீரோ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் பச்சை இலைய தட்டி என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது.