உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக்பாஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் எப்பொழுதும் பரபரப்பான நிகழ்ச்சியாகும். இது வரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசனுக்கான கண்டெஸ்டன்ட் தேடல் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக கடந்த நான்கு சீசன்களிலும் பங்குபெற்ற கண்டெஸ்டன்ட்களை திரட்டி BB ஜோடிகள் என்ற ஒரு நடன நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன் துவங்கியது விஜய் டிவி.


அதில் நடுவராக நடிகர் ரம்யா கிருஷ்ணனும் நடிகர் நகுலும் பங்குபெற்றனர். கண்டெஸ்டன்ட்களாக சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், ஷாரிக், கேபிரில்லா, ஆஜித், மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, மரிய ஜூலியானா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.



தங்களது வித்தியாசமான நடனத்திறனை வெளிப்படுத்திவருவதால் அந்நிகழ்ச்சி பல பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அதிலும் வனிதா போன்றோர்கள் அடிக்கடி ஏற்படுத்திய சர்ச்சைகளால் பெரும் கவனம் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் வனிதா நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது திரும்ப திரும்ப ப்ரோமோக்களில் ஒளிபரப்பப்பட்டு பார்வையாளர்களை கட்டி இழுத்தது.


அதுமட்டுமின்றி, நடன துறையில் நிபுணத்துவம் இல்லாத போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிரமம் எடுத்து நடனம் ஆடி வருகிறார்கள். ஜூலி, அனிதா சம்பத் ,ஷாரிக், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பைனாலுக்கு செல்லும் முனைப்பில் தங்களது திறமைகளை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.



பைனலுக்கு சில எபிசோடுகளே உள்ள நிலையில் பைனலுக்கான ஷூட்டிங் நிறைவுபெற்றதாக தெரிகிறது. பிக்பாஸ் ஒன்று முதல் நான்கு சீசன்களில் பங்குபெற்று BB ஜோடிகளில் நடன போட்டியாளராக பங்கு பெறாதவர்கள் ஆன லாஸ்லியா, ஓவியா, சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் அதன் இறுதிச்சுற்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. நிகழ்ச்சியில் தங்களது விருப்ப போட்டியாளர்களான ஓவியா, லாஸ்லியா போன்றோர் பங்குபெருவதால் அவரவர் ரசிகர்கள் வெகுவாக ஷேர் செய்து விவாதித்து வருகின்றனர்.


இறுதிசுற்றில் அனிதாவும், ஷாரிக்கும் அசரவைக்கும் நடனத்தை அளித்ததாக கூறப்படுகிறது. இதன் டைட்டில் வின்னர் குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அறிந்துகொள்ள தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்வரை காத்திருக்க வேண்டும்.