பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா தான் யாரை முதலில் காதலித்தது, அத்துடன் தனக்கு யார் முதல் முத்தம் கொடுத்தது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். கவினுடன் காதல், கண்டித்த தந்தை, சேரனின் பாசம் என நிகழச்சியை சுவாரஸ்யமாக்கியதில் லாஸ்லியாவுக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவராகிவிட்டார்.


அவரது கையில் கணிசமான அளவு படங்கள் உள்ள கூகுள் குட்டப்பா திரைக்கு வர உள்ளது.  ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கம் பிரண்ட்ஷிப் படத்தில் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் லாஸ்லியா. அர்ஜூன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஸ், சக்தி, வேல்முருகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஒருபக்கம் திரைப்படம் என்றால் மறுபக்கம் சோஷியல்  மீடியாவிலும் படு ஆக்டீவாக இருக்கிறார் லாஸ்லியா.நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டார். 


முதல் காதல்


தற்போது, தனது முதல் முத்தம், முதல் காதல் குறித்து லாஸ்லியா கூறியுள்ளார். பள்ளியில் படிக்கும்போது முதல் காதல் ஏற்பட்டதாகவும், அதுவும் ஒருதலை காதல்தான் எனவும் கூறிய லாஸ்லியா, காதலித்த பைனுக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறினார். 


முதல் முத்தம்


ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், அதுதான் தனது முதல் முத்தம் என்றும் லாஸ்லியா ஓப்பான கூறியுள்ளார்.


 






சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லாஸ்லியா தான் ஒல்லியானது ஏன் என்பது குறித்தும் பேசியுள்ளார். அதில்,  எனக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்தது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை. முன்பெல்லாம் நான் ஒல்லிதான். பிக்பாஸ் வந்த பிறகே நான் குண்டாக ஆனேன். அதனால் மீண்டும் எடையைக் குறைத்து பழைய நிலைக்கு திரும்பினேன். இதுமட்டுமின்றி சினிமாதான் அடுத்த இலக்கு என்றாகிவிட்டது. அதற்கு தயாராகவே இப்படி உடல் எடையைக் குறைத்தேன். எல்லாமும் காரணம்தான் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண