நடிகர் ஶ்ரீகாந்த் இந்த ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன் நிகழ்ச்சி ஒன்றில் தனது ரசிகர்களை நடத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளானது. கருப்பு நாயகிகளை நடிக்க வைப்பது குறித்த மாரி செல்வராஜின் கருத்து , திரெளபதி 2 பாடலை பாடியதற்காக சின்மயி ஆகியோர் விமர்சனத்திற்கு உள்ளானார்கள்
கருப்பு நடிகைகள் பற்றி மாரி செல்வராஜ்
பைசன் படத்தில் கருப்பு நிற நடிகையை நடிக்க வைக்காமல் வெள்ளை நிற நடிகைக்கு ஏன் கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைத்தீர்கள் என்கிற விமர்சனத்தை சந்தித்தார் மாரி செல்வராஜ். இதற்கு ' மாற்றுதிறனாளிகள் பற்றிய படமெடுத்தால் நிஜ மாற்றுதிறனாளியை நடிக்க வைக்க முடியுமா. யாருக்கு அர்பணிப்பு இருக்கோ அவர்களை தான் நடிக்க வைக்க முடியும் " என மாரி செல்வராஜ் கொடுத்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பைசன் படத்தின் வெற்றிவிவாழில் தான் பேசிய கருத்தை விளக்கிய மாரி செல்வராஜ் தனது கருத்தால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
ரசிகர்களை காக்க வைத்த நயன்தாரா
நடிகை நயன்தாரா கோயம்புத்தூரில் தனது சானிடரி நாப்கின் ப்ரோமோஷனுக்காக நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வுக்கு வந்த ரசிகர்களை பல மணி நேரம் காக்க வைத்ததற்காகவும் செல்ஃபீ எடுத்துக்கொள்ளலாம் என சொல்லி பின் அனைவரையும் திருப்பி அனுப்பியதாகவும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை ' அவங்க நார்மல் பீபள் இல்ல' என்று சொன்னது சமூக வலைதளத்தில் மீம் மெட்டிரியலாக மாறியது.
மோகன் ஜி சின்மயி
மோகன் ஜி இயக்கியுள்ள திரெளபதி 2 படத்தில் சின்மயி ஒரு பாடலை பாடியிருந்தார். அண்மையில் இந்த பாடல் வெளியானபோது மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மீது பலரும் விமர்சனம் வைத்தனர். மோகன் ஜி படத்தில் பாடியது குறித்து சின்மயி பகிரங்க மன்னிப்பு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் ஶ்ரீகாந்த் கைது
கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது இந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்த ஶ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடம் நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.