Lollu Sabha Manohar: முன்பு போல் தற்போது பட வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை என்று லொள்ளு சபா மனோகர் உருக்கமாக பேசியிருப்பது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

லொள்ளு சபா மனோகர்:

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிலொள்ளு சபா’. பிரபலமான சினிமா படங்களை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று இருக்கும். இதில் நடத்த பலரும் பின்னாளில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களாகவும் வலம் வந்தனர். குறிப்பாக லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த சந்தானம் தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அதேபோல், லொள்ளு சபா மனோகரும் முக்கியமான கமெடி நடிகர்களில் ஒருவர். இவர் மற்ற நடிகர்களை கலாய்க்கும் பாணி, இவரது உடல்மொழி,இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

பட வாய்ப்பு குறைஞ்சிடுச்சு:

இந்த நிலையில் தான் தற்போது முன்பு போல் தனக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை. நீங்கள் நினைத்தால் நான் மீண்டும் ஜொலிப்பேன் என்று உருக்கமாக பேசியுள்ளார் லொள்ளு சபா மனோகர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “முன்பு போல் தற்போது எனக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை.  பழைய கலைஞர்களை எல்லாம் கூப்பிட வேண்டும். ஆனால், இப்போது அதை யாரும் செய்வதில்லை. அது தான் கவலை அளிக்கிறது.  அது நடந்தால் எனக்கும் வேலை கிடைக்கும். இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு அவர்களே நம்மை அழைப்பதில்லை.” என்று கூறியுள்ளார்.

சந்தானம் உடன் பட வாய்ப்பு:

முன்பு நடிகர் சந்தானம் உடன் இணைந்து நிறைய படங்களில் நடித்தீர்கள் ஆனால் இப்போது அதுவும் குறைந்திருக்கிறதே ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லொள்ளு சபா மனோகர், “ சந்தானம் இருந்தார் மனோகர் இருந்தார் என்று சொல்கிறீர்களே தவிர அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணம் உங்களிடம் வரவில்லை. அது வந்தால் இணைந்து நடிப்போம்.”என்றார்.

சிறிய பட்ஜெட் படங்களில் தான் அதிகம் உங்களை பார்க்க முடிகிறது என்ற கேள்விக்கு, “எனக்கு இடையில் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் தான் நான் சிறிய இடைவேளை விட்டு விட்டேன். என்னை அழைத்தால் நான் செல்வதற்கு தயராக இருக்கிறேன். எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்தால் அதில் சிறப்பாக நடித்து அதை டெவலப் செய்வேன்.   தானக முன்வந்து எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நம்மால் கேட்கமுடியது” என்று கூறியுள்ளார் லொள்ளு சபா மனோகர். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த லொள்ளு சபா மனோகர் தற்போது இவ்வாறு கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.