விஜய் டிவியில் ஒளிபரப்பான, லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக காமெடியனாக பிரபலமானவர் சுவாமிநாதன். ஆனால், இந்த காமெடி  நிகழ்சியில் கலந்து கொள்ளும் முன்பே, ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

Continues below advertisement


ரஜினிகாந்த்  நடித்த 'நான் சிகப்பு மனிதன்' திரைப்படம் மூலம் அறிமுகமான இவர்... கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளியான சுந்தர் சியின் மதகஜராஜா படத்தில் நடித்துள்ளார். 


சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சியிலும் ஆனந்த பவன், லொள்ளு சபா, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, தென்றல் போன்ற தொடர்களில் அவர் நடித்துள்ளார். தனக்கென தனி ஸ்டைலை கீப் அப் பண்ணி வரும் இவர், தனது மகளின் திருமணத்தை மிகவும் எளிமையாக முறையில் நடத்தி முடித்துள்ளார். 


கும்பகோணத்தில் நடைபெற்ற சுவாமிநாதனின் மகள் ஐஸ்வர்யா என்ற சம்பூரணத்துக்கும், கீர்த்தி வாசன் என்ற சுந்தர குமாருக்கும் தான் எளிமையான முறையில் திருமண்ம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வையாபுரி, காளி வெங்கட் ஆகியோர் பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.