கூலி 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தில் அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்ற. அந்த வகையில் செளபின் சாஹிர் , நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களின் கேரக்டர்களின் பெயர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. கடைசியாக படத்தின் ரஜினியின் பெயர் தேவா என்று தெரிவிக்கப்பட்டது. 


பேரத்தை தொடங்கிய சன் பிக்ச்சர்ஸ் 


ரஜினிகாந்த் நடித்த பல படங்களை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. எந்திரன் , பேட்ட , அண்ணத்த  , ஜெயிலர் ஆகிய நான்கு படங்களை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் அண்ணாத்த படத்தை தவிர மற்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றன. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படம் உலகளவில்  650 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ரஜினி நடித்த 2.0 படம் உள்ளது. 






தற்போது ஐந்தாவது முறையாக ரஜினியின் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் இன்னொரு பக்கம் ரஜினி என இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, அதுவும் படம் தொடங்கிய ஒரு சில மாதங்களில்.


இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் தமிழ் படங்களுக்கான மார்கெட் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் 32 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு 166 கோடி வசூல் செய்தது.  அதே நேரத்தில் விஜயின் லியோ படம் 62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான தி கோட் படம் 53 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கமல் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படம் 63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


ரஜினியின் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை 65 கோடிக்கு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டீல் முடிக்கப்பட்டால் அதிக விலைக்கு விற்பனையான தமிழ் திரைப்படமாக கூலி படம் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது