Actor Sri: தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீ. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடர் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவர் வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். 

என்னதான் ஆச்சி நடிகர் ஸ்ரீ்க்கு?

இன்றைய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக உலா வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தின் கதாநாயகன் இவர் ஆவார். இந்த நிலையில், நடிகர் ஸ்ரீயின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

அதாவது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் அவர் மீது கவலை கொள்ளச் செய்துள்ளது. மேலாடையில்லாமல் பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகர் ஸ்ரீ கர்மா காரணமா? காசு காரணமா? 37 வருடங்கள் ஏமாற்றிக் கொண்டு இருந்துள்ளேன் என்று விசித்திரமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 

ரசிகர்கள் வேதனையா?

மேலும், கடந்த ஒரு வருடமாக நீண்ட தலைமுடியை வளர்த்து வந்த அவர் தற்போது அந்த முடியில் வண்ணங்கள் பூசி தனக்கு அழகான பெண்கள் மற்றும் பெண்ணாக மாறிய ஆண்கள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவுகளும், அவரது செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்று சோகத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ப்ரமோஷனா?

சிலர் இது அவரது புதிய படத்திற்கான ப்ரமோஷனா?கவும் இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 37 வயதான நடிகர் ஸ்ரீ இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் இறுகப்பற்று படத்தில் நடித்தார். ரசிகர்களின் கேள்விக்கு அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அவர் புதியதாக எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்போதைய சூழலில், நடிகர் ஸ்ரீயின் மன நிலை மற்றும் உடல்நிலையை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். சென்னையைப் பூர்வீகமாக கொண்ட நடிகர் ஸ்ரீயின் முழுப்பெயர் ஸ்ரீராம் நடராஜன் ஆகும். இவர் காட்சி தொடர்பியல் எனப்படும் விஸ்காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.