லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் லியோ திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. இரண்டு விஜய், கழுதைப்புலியுடன் சண்டை என ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் லியோ படத்தின் ஹைலைட்ஸாக இருக்கும் என்பது நிச்சயம்.
மீண்டும் சர்ச்சை
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சர்ச்சையை சந்தித்து வருகிறது லியோ திரைப்படம். முதல் நான் ரெடிதான் பாடல் வெளியாகி அந்தப் பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதற்காக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தக் காட்சி ஏற்கெனவே இணையதளத்தில் நெகட்டிவ் கருத்துக்களைப் பெற்று வருகிறது. இப்படியான நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்ற மற்றொரு காட்சி ரசிகர்களுக்கு இடையில் அனல் பறக்கும் வாதத்தை கிளப்பியுள்ளது. இந்த முறை சண்டை லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.
காப்பியடிக்கப்பட்டதா ரிவால்வர் காட்சி
லியோ படத்தின் ட்ரெய்லரின் கடைசி காட்சியாக விஜய் ரிவால்வரை ஸ்டைலாக தனது கையில் சுற்றி சுடும் காட்சி இடம்பெற்றிருந்தது. வாயில் சிகரெட்டுடன் வரும் விஜய்யை இந்தக் காட்சியில் அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும், சும்மா இருக்கும் இணையவாசிகள் இந்த காட்சிக்கும் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் ஒரு காட்சிக்கும் இடையில் ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஜவான்
அட்லீ இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் , நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பல விதமான படங்களில் இருந்து காட்சிகள் காப்பியடிக்கப்பட்டதாக இணையதளத்தில் சினிமா ரசிகர்கள் ஜவான் திரைப்படத்தை விமர்த்து வந்தார்கள். இந்நிலையில் ஜவான் திரைப்படத்திலும் லியோ படத்தைப் போல் ரிவால்வர் துப்பாக்கியை சுழற்றும் காட்சி இடம்பெற்றிருப்பதால் ஜவான் திரைப்படத்தை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இதனால் இணையதளத்தில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.
மறுபக்கம் எப்படியும் அட்லீயே அந்தக் காட்சியை ஏதாவது ஹாலிவுட் படத்தில் இருந்து தான் எடுத்திருப்பார், லோகேஷ் கனகராஜூம் அதே படத்தில் இருந்து இந்தக் காட்சியை எடுத்திருக்கலாம் என்றும், காப்பியடிக்கும் அளவுக்கு அட்லீ சொந்தமாக காட்சிகளை எல்லாம் எழுதவில்லை என்று மற்றொரு தரப்பு ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க :Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!