தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்துள்ள 'DC' திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continues below advertisement

குறும்படங்கள் மூலம் தனது திரைப்படப் பயணத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வித்தியாசமான திரைக்கதை மற்றும் பரபரப்பான திரைக்காட்சிகளால் அந்தப் படம் கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். குறிப்பாக, பல படங்களை ஒரே கதையுலகில் இணைக்கும் LCU என்ற முயற்சி இந்திய சினிமாவிலேயே பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்து வெளியான கூலி திரைப்படத்திலிருந்துலோகேஷ் கனகராஜ் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இந்த விமர்சனங்கள் ஒருகட்டத்திற்கு மேல் தனிப்பட்ட தாக்குதல்களால மாறத் தொடங்கின. இதன் காரணமாக தனது படங்கள் குறித்து நேர்காணலில் பேசுவதை தவிர்க்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரம்மாண்ட ஆக்‌ஷன் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். 

Continues below advertisement

இந்தச் சூழலில், இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது திறமையை நிரூபிக்கும் நோக்கில் லோகேஷ் கனகராஜ் 'DC' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நீண்ட காலமாக அவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறுகிறது.

DC ரிலீஸ் தேதி

'DC' திரைப்படத்தை அறிமுக அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பஅனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். வமிகா கப்பி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ரத்தம் தெறிக்கும் ரொமாண்டிக் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள டிசி திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைஅயரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பின்னணி இசை ஏற்கனவே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.