இந்திய சினிமாவின் பிரபலமான நடிகரும், பன்முக கலைஞருமாக வலம் வருபவர் கமல்ஹாசன். அரசியலில் நுழைந்த பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்த கமல்ஹாசன் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியானது.

Continues below advertisement


இந்த  நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, பட அறிவிப்பை முன்னிட்டும், படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் உள்ள சில காட்சிகளை வைத்தும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.




அயன் படத்தில் சூர்யா- பிரபு பேசும் காட்சிகளை பதிவிட்டு, “சும்மா பைர்-ஆ இருக்கு தாஸ் அண்ணா” என்று இந்த மீம்சில் உள்ளது.




1986-ஆம் ஆண்டில் வந்த விக்ரம் படத்தையும் 2021ல் வெளியான விக்ரம் படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டு, வடிவேலும், மற்றொரு நகைச்சுவை நடிகரும் டீக்கடையில் அமர்ந்திருக்கும் காட்சியை போட்டு, கமல்ஹாசன் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பார்த்து “நம்மளை விட முரட்டு பேன் பாய் ஆ இருப்பாரோ…?” என்று கேட்பது போல உள்ளது.




ஒரு குறும்புக்கார ரசிகர் கமல்ஹாசனின் கையில் உள்ள துப்பாக்கியை பாகைமானியாக்கி 67 டிகிரி செல்சியஸ் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு கீழ் முதல்வன் படத்தில் மணிவண்ணன் கூறும் இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே டயலாக் உள்ளது.




மேலும், கிளம்ப்ஸ் காட்சியில் இடம்பெற்றிருந்த பிரியாணி அண்டா புகைப்படத்தை குறிப்பிட்டு, லோகேஷ் கனகராஜூடம் ஒருவர், “பிரியாணி அண்டாலாம் இருக்க…பெருசா சம்பவம் பண்ணப்போறீங்க போல..” என்று கூறுவது போல உள்ளது.


விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் முழு நீள ஆக்‌ஷன் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண