✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Celebrities In Election: மக்களவை தேர்தலில் எந்த பிரபலங்கள் எங்கெங்கு போட்டியிடுகிறார்கள் தெரியுமா?

செல்வகுமார்   |  29 Mar 2024 10:32 AM (IST)

Celebrities In Lok Sabha 2024: மக்களவை தேர்தலில் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களவை தேர்தலில் களம் காணும் பிரபலங்கள்

Celebrities In Lok Sabha 2024: 2024 மக்களவை தேர்தலில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியே நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது முதல் கட்டமாக சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த துறையைச் சேர்ந்த பிரபலங்களை தங்களின் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளனர். எந்த பிரபலங்கள் எந்த கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.

யூசுப் பதான்:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

ஹேம மாலினி:

பாலிவுட் நடிகையான ஹேம மாலினி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சுரேஷ் கோபி:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகர் சுரேஷ் கோபி, பாஜக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராதிகா சரத்குமார்: 

பாஜக கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இவர் விருதுநகர் தொகுதியில்  போட்டியிடுகிறார்.

விஜய பிரபாகர்:

தமிழ்நாட்டில், அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி சார்பாக கேப்டன் என மக்களால் அழைக்கப்படும் விஜயகாந்த்தின்  மூத்த மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இவர் விருதுநகர் தொகுதியில்  போட்டியிடுகிறார்.

கங்கனா ரனாவத்:

நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.

 

Published at: 29 Mar 2024 10:32 AM (IST)
Tags: suresh gopi Vijay Prabhakaran hema malini Lok Sabha Election 2024 Radhika Sarathkumar
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Celebrities In Election: மக்களவை தேர்தலில் எந்த பிரபலங்கள் எங்கெங்கு போட்டியிடுகிறார்கள் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.