பராசக்தி திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இருந்தாலும் படத்தின் இந்தி மொழிக்கு எதிரான 25 வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை வெளியிடும் நெருக்கடியில் படக்குழுவும் தணிக்கை குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த வார்த்தைகளை திருத்தம் செய்துள்ளன. தற்போது பராசக்தி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன

Continues below advertisement

தமிழ் படங்களுக்கு மத்திய அரசு கெடுபிடி

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்களும் மத்திய அரசியன் தணிக்கை குழுவால் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன. இரு படங்களிலும் மத்திய அரசை விமர்சனம் செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணம். விஜயின் ஜனநாயகன் படம் தணிக்கை சர்ச்சையில் சிக்கி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு ரிலீஸூக்கு ஒரு நாள் முன்பு இன்று  U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரு  படத்தில் இருந்து மொத்தம் 25 வார்த்தைகள் தணிக்கை குழுவின் பரிந்துரையால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 

இந்தி மொழிக்கு எதிரான வசனங்கள் திருத்தம் 

குறிப்பாக பராசக்தி படத்தில் இந்தி மொழிக்கு எதிரான வசனங்கள் அனைத்தும் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1960 களில் இந்தி மொழியாக ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பின்னணியில் மாணவர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது பராசக்தி திரைப்படம். படத்தின் மைய கதையே இந்தி திணிப்பிற்கு எதிராக இருக்கையில் அந்த மொழிக்கு எதிரான வசங்களை நீக்குவது என்பது படத்தின் உண்மைத்தன்மையை குலைக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் 

Continues below advertisement

நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் 

பராசக்தி படத்தின் டீசரில் இருந்து மிக முக்கியமான வசமான இருந்து வந்த 'தீ பரவட்டும் ' என்கிற வார்த்தை 'நீதி பரவட்டும் ' என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தி அரக்கி உள்ளிட்ட பல வார்த்தைகள் படத்தின் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பராசக்தி படத்தில் இருந்து திருத்தப்பட்டுள்ள வார்த்தைகளின் பட்டியல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன