கொரோனா காலக்கட்டம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஓடிடி தளங்களில் அதிக அளவிலான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில், ’இந்த வாரம் சினிமா வாரம்’ என சொல்லும் அளவிற்கு, ஜூலை 12-ம் தேதியில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு ஓடிடியில் நிறைய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. பொதுவாக வெள்ளி, சனிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாகும். இந்த மாதம், வார நாட்களிலேயே சில படங்கள் ரிலீஸாக உள்ளன. ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!


1. மாலிக் (மலையாளம்)


எங்கு பார்ப்பது: அமேசன் ப்ரைம்


ரிலீஸ் தேதி: ஜூலை 15



ஃபகத் ஃபாசில் நடிப்பில், மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் மாலிக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாலிக் திரைப்படம் வரும் 15-ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2. தூஃபான் (ஹிந்தி)


எங்கு பார்ப்பது: அமேசான் ப்ரைம்


ரிலீஸ் தேதி: ஜூலை 16



விளையாட்டு டிராமாவாக உருவாகியுள்ள தூஃபான் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. ஃபர்ஹான் அக்தர், மிரினால் தாக்கூர் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இயக்கியுள்ளார். ரங் தே பசந்தி, டெல்லி-6 போன்ற திரைப்படங்களையும், பிரபலமான பாக் மில்கா பாக் திரைப்படத்தையும் இயக்கியவர் இவர்.


3. நாரப்பா (தெலுங்கு)


எங்கு பார்ப்பது: அமேசான் ப்ரைம்


ரிலீஸ் தேதி: ஜூலை 20






தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் ரீமேக் படம்தான் நாரப்பா. வெங்கடேஷ், ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை, ஸ்ரீகாந்த் அடலா இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.


4. வாழ் (தமிழ்)


எங்கு பார்ப்பது: சோனி லைவ்


ரிலீஸ் தேதி: ஜூலை 16



நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாழ்' திரைப்படம் ஜூலை 16 சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. அருவி திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோதமன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இத்திரப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 


5. சார்ப்பட்டா


எங்கு பார்ப்பது: அமேசான் ப்ரைம்


ரிலீஸ் தேதி: ஜூலை 22



திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜூலை 22-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.