ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் ராமாயண கதையை  அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் வரும் ஜூன் 16ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியன் படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகி சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் குறித்து படக்குழு புதிதாக ஒரு தகவல் வெளியிட்டது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.  


இந்த அறிவிப்பு வெளியானது முதல் கடுமையான ட்ரோல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இதுவரையில் உலக அளவில் வெளியான படங்களில் எந்தெந்த படங்களுக்கு எந்தெந்த கதாபாத்திரத்துக்கு திரையரங்கத்தில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.


 




லைட் இயர் : 


 

அனிமேஷன் ஜானரில் டாய் ஸ்டோரி படம் போல டிஸ்னி  தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு உருவான படம் லைட் இயர். ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமான பால் நியூமேன் அடிப்படையில் ஒரு ராணுவ வீரர். டிஸ்னி தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் அவர் கோல்டன் குளோப், ஆஸ்கார் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர். திரையரங்குகளில் லைட் இயர் படம் வெளியான போது அங்கு பால் நியூமேனுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தி பேட் கைஸ் :

அனிமேஷன் ஜானரில் 2022ம் ஆண்டு வெளியான 'தி பேட் கைஸ்' படம் வெளியான போது ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காங்கிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. சீனாவை பூர்வீகமாக கொண்ட அவர் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் அனிமேஷன் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

தி லாஸ்ட் சிட்டி : 

 

பிராட் பிட் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான படம் 'தி லாஸ்ட் சிட்டி'. இப்படம் திரையரங்கில் வெளியான போது காமெடி நடிகை பெட்டி வைட்டிற்காக ஒரு சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் தி லாஸ்ட் சிட்டி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 2021ம் ஆண்டு பெட்டி வைட் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் கன் மாவெரிக் :

டாப் கன் சீரிஸ் உலகளவில் மிகவும் பிரபலமான ஒன்று. டாம் க்ரூஸ் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான போது திரையாங்கில் நடிகை கெல்லி மெக் கில்லிஸுக்காக ஒரு சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இவர் 1986ம் ஆண்டு வெளியான டாப் கன் சீரிஸில் நடித்தவர்.

தி பேட் மேன்:

குழந்தைகளின் மிகவும் அபிமான ஒரு சூப்பர் ஹீரோ பேட் மேன். இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இப்படம் திரையரங்கில் வெளியான போது சாட்விக் போஸ்மெனுக்காக ஒரு சீட் காலியாக விடப்பட்டு இருந்தது.

இந்த ஹாலிவுட் படங்களை தொடர்ந்து தற்போது 'ஆதிபுருஷ்' படம் வெளியாகும் போது அனுமனுக்காக ஒரு காலியிடத்தை விட திட்டமிட்டுள்ளது படக்குழு.